Tokyo ஒலிம்பிக் வீரர்களுக்கு விருந்து கொடுக்கிறார் குடியரசுத் தலைவர்; High Tea என்றால் என்ன?

சாதாரண தேநீர் விருந்துக்கும், இந்த High Tea விருந்துக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசங்கள் என்ன?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2021, 07:48 PM IST
  • High Tea என்றால் என்ன?
  • தேநீர் விருந்து என்றால் என்ன?
  • ஒலிம்பிக் வீரர்களுக்கு தேநீர் விருந்து
Tokyo ஒலிம்பிக் வீரர்களுக்கு விருந்து கொடுக்கிறார் குடியரசுத் தலைவர்; High Tea என்றால் என்ன? title=

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் 2020 ல் பங்கு கொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கிறார். இந்திய சுதந்திர தினத்திற்கு முந்தையிஅ நாள் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இந்த விருந்து அளிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் High Tea விருந்தளிக்கிறார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. விருந்து, விருந்தோம்பல், தேநீர் விருந்து எல்லாம் சரி. அது என்ன High Tea உபசாரம்? தேநீர் கொடுப்பது என்பது விருந்தில் சேர்த்தியா? என பலருக்கும் கேள்விகள் எழலாம். 

High Tea என்பதை அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். சாதாரண தேநீர் விருந்துக்கும், இந்த High Tea விருந்துக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசங்கள் என்ன?

High Tea என்பது உயர்ரக தேநீர் விருந்து என்றும், சிற்றுண்டி விருந்து என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது முழுமையான பொருள் தராது. தேநீருடன் சூடான உணவும் இந்த விருந்தில் பரிமாறப்படும். தேநீர், காபி, பால், பானங்கள் என குடிபானங்களுடன் இறைச்சி, மீன் உணவு, பொறித்த, வறுத்த அல்லது வேகவைத்த உணவு அல்லது காய்கறிகளும் இந்த விருந்தில் இடம்பெறும். 

"பிற்பகல் தேநீர்" (afternoon tea) மற்றும் "உயர் தேநீர்" எனப்படும் High Tea என்ற தேநீர் மரபுகள் இரண்டுமே பிரிட்டிஷ் வரலாற்றில் ஊடுருவி உள்ளன. இந்த இரண்டு விருந்தின் வேறுபாடுகள், மிகவும் நுட்பமானவை.

பிற்பகல் தேநீர் என்றால் என்ன?
பிற்பகல் தேநீர் (afternoon Tea) என்பது பிரிட்டிஷ் உணவு பாரம்பரியமாகும், இதில், சாண்ட்விச்கள், கேக் என தின்பண்டங்களுடன் தேநீர் அருந்துவதை குறிக்கும். பிற்பகல் 4 மணியளவில் தேநீர் குடிப்பதை afternoon tea என்று வகைப்படுத்தலாம். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் இளவரசி டச்சஸ் அன்னா (Anna, the Duchess of Bedford) கொண்டு வந்த பழக்கம் இது.

Also Read | மதுபானத்துடன் இந்த “5” பொருட்களை சாப்பிடவே கூடாது..!!!

பகல் உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையிலான நீண்ட இடைவெளியை நிரப்ப பிற்பகல் தேநீருடன் லேசான சிற்றுண்டி வகைகளை உண்ணும் பாரம்பரியத்தை இளவரசி அன்னா கொண்டுவந்தார். இளவரசியின் வழக்கம் அனைவருக்கும் உகந்ததாக இருக்கவே, அனைவரும் இதை பின்பற்றத் தொடங்கிவிட்டனர். எனவே பிற்பகல் தேநீர் பாரம்பரியம் தொடங்கியது.

பலரின் பணிகள் வித்தியாசமாக இருக்கும். பிற்பகலில் தேநீர் விருந்தானது, விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் விருந்தோம்பலுக்காக நடைபெறுகிறது. எனவே, உண்மையான பிற்பகல் தேநீர் விருந்தை அனுபவிக்க வேண்டுமானால், லண்டனில் உள்ள ரிட்ஸ் என்ற உணவகத்திற்கு செல்லலாம்.

ஆனால், அவர்களின் பிற்பகல் தேநீர் சேவையை பலரும் விரும்புவதால், ஒரு நாள் பிற்பகல் தேநீர் விருந்தை அனுபவிக்க பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டும். Yorkshire என்ற இடத்தில் புகழ்பெற்ற தேநீர் விருந்து அறைகளே அமைக்கப்பட்டுள்ளன. அவை 1919 இல் திறக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளன.

Also Read | பாலியல் ஆரோக்கியத்திற்கு சமையலறையின் இந்த ‘5’ மசாலாக்கள் போதும்..!

உயர் தேநீர் (High Tea) என்றால் என்ன?
19 ஆம் நூற்றாண்டில் செல்வந்தர்கள் உருவாக்கியது உயர் தேநீர். புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட பிரிட்டனில் தொழிலாளர்களுக்கு வேலை முடிவடையும் வரை தேநீர் குடிக்க முடியாது. நீண்ட நேரம் வேலை செய்து களைத்த பிறகு, தேநீருடன், பிஸ்கட் கேக் போன்றவற்றை சாப்பிட்டால் அவர்களுக்கு பசி அடங்காது. எனவே அவர்களுக்கான உணவுடன் தேநீர் வழங்குவது உயர் தேநீர் (High Tea) என்று பொருள் கொள்ளப்பட்டது.

இன்றும், பிரிட்டனில் உழைக்கும் வர்க்க மக்களின் வீடுகளில் இரவு உணவை உயர் தேநீர் (High Tea) என்று தான் அழைக்கின்றனர். ஆனால் வேலை முறைகள் மீண்டும் மாறிவிட்டதால், பல வீடுகளில் இப்போது இரவு உணவை டின்னர் என்றே குறிப்பிடுகின்றனர்.  அதாவது இரவு உணவுடன் தேநீரும் இருக்கும். அது வெறும் கேக் மற்றும் பிஸ்கட்டுடன் இல்லாமல், பலவகை உணவுகளுடன் சேர்ந்தே இருக்கும்.

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் உயர் தேநீர் (High Tea) விருந்தில் வெறும் தேநீர், காபி, பானங்கள் மட்டுமல்ல, பலவகையான சிற்றுண்டிகளும் இருக்கும். அங்கிருக்கும் விதவிதமான சிற்றுண்டிகளை சாப்பிட்டாலே இரவு உணவை முடித்தது போலவே இருக்கும்.
பொதுவாக உயர் தேநீர் (High Tea) என்பது அனைவரும் கூடி பேசுவதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

Also Read | Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News