கன்னிகளின் ரத்தத்தில் குளித்த கொடூர Elizabeth Bathory வரலாறு தெரியுமா..!!!

எலிசபெத் அழகான பெண்களை வெறுத்து அவர்களை கொடுமைபடுத்தினாள். எலிசபெத் பாத்தரி மட்டுமல்ல, அவளுடைய பெற்றோரும் மற்ற உறவினர்களும் கூட கொடூரமானவர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 10:11 PM IST
  • எலிசபெத் அழகான பெண்களை வெறுத்து அவர்களை கொடுமைபடுத்தினாள். எலிசபெத் பாத்தரி மட்டுமல்ல, அவளுடைய பெற்றோரும் மற்ற உறவினர்களும் கூட கொடூரமானவர்கள்.
  • எலிசபெத் இளமையாக இருக்க வேண்டும் என்ற குரூர ஆசைக்காக 600 பேர் கொல்லப்பட்டனர்
  • எலிசபெத் மிக கொடூரமான பெண் கொலைகாரி என்று அழைக்கப்படுகிறார்
கன்னிகளின் ரத்தத்தில் குளித்த கொடூர Elizabeth Bathory வரலாறு தெரியுமா..!!! title=

புதுடில்லி: பிப்ரவரி 14, 1556 அன்று அக்பர் டெல்லியின் அரியணையை கைபற்றினார். சரியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 1560 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 6000 கி.மீ தொலைவில் உள்ள ஹங்கேரியில் ஒரு வீட்டில் ஒரு பெண் பிறந்தார். அவரது பெயர் எலிசபெத் பாத்தோரி, பின்னர் வரலாற்றில் மிகப் பெரிய பெண் கொலைகாரி என்று அழைக்கப்பட்டாள். அவள் தனது 15 வயதில் முதல் கொலையை செய்தாள்

எலிசபெத் அழகான பெண்களை வெறுத்து அவர்களை கொடுமைபடுத்தினாள். இது மட்டுமல்லாமல், கன்னிகளின் ரத்தத்தில் குளித்தால் தான் இளமையாக இருப்பாள் என்று நினைத்து அவர்களது இரத்தத்தில் குளிப்பாள். தனது அழகைப் பேண வேண்டும் என்ற கொடூரமான ஆசையில், 600 க்கும் மேற்பட்ட அழகான பெண்களைக் கொன்றாள். எலிசபெத்தை வரலாற்றில் மிக பயங்கரமான பெண் கொலைகாரி என்று அழைப்பதற்கான காரணம் இதுதான்.

ஒருமுறை, ஒரு பெண் எலிசபெத்திற்கு அலங்காரம் செய்ய உதவிய போது, தவறுதலாக முடியை இழுத்து விட்டார். எலிசபெத் அந்தப் பெண்ணைத் தாக்கியபோது, ​ ரத்தம் வந்து விட்டது. அன்றிரவு எலிசபெத் அந்தப் பெண்ணின் ரத்தம் பட்ட இடம், அவளுடைய தோல் மேலும் இளமையாகவும் அழகாகவும் மாறியது என்பதை கண்டு அப்போதிருந்து, அவர் தனது இளமையைத் தக்க வைத்துக் கொள்ள கன்னிப் பெண்களின் இரத்தத்தால் குளிக்கத் தொடங்கினார், இதற்காக கொலை செய்யத் தொடங்கினாள்.

ALSO READ | யூனிட் 731: இரண்டாம் உலகப்போரின் மிக கொடூரமான சித்திரவதை இல்லம்

எலிசபெத் பாத்தரி மட்டுமல்ல, அவரது பெற்றோரும் மற்ற உறவினர்களும் (எலிசபெத் பாத்தரி குடும்பம்) கூட மிகவும் கொடூரமானவர்கள். குழந்தை பருவத்திலிருந்தே, தனது கொடூரமான பெற்றோர் அப்பாவி மக்களை அடிப்பதை அவர் கண்டிருக்கிறார். எலிசபெத் மாமாவிடமிருந்து சாத்தானிய வேலைகளை கற்றுக் கொண்டதாகவும், அத்தையிடம் இருந்து துன்புறுத்தக் கொடுமைபடுத்தப்படுவதை கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எலிசபெத் பாத்தோரி தனது 15 வயதில் 19 வயதான ஃபெரெங்க் II நடாஸ்டி என்ற நபருடன் திருமணம் செய்து கொண்டார். துருக்கியர்களுக்கு எதிரான போரில் ஹங்கேரியின் ஹீரோவாக இருந்தார். எலிசபெத் தனது கணவருக்கு முன்னாலேயே அழகான அப்பாவி சிறுமிகளை கொல்வார். கன்னிப் பெண்களைக் கொல்வது அவரது பொழுதுபோக்காக மாறியது. எலிசபெத்துக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். அவரது கணவர் 1604 இல் தனது 48 வயதில் இறந்தார். இதற்குப் பிறகு அவள் ஸ்லோவாக்கியாவுக்குச் சென்றாள். அவர் கொலைகளைச் செய்வதற்கும் சிறுமிகளை சித்திரவதை செய்வதற்கும் உதவ ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

அவளது அரண்மனைக்கு வருகை தரும் பெண்கள் ஒருபோதும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்பதற்கு இதுவே காரணம். 

ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!

இவள் செய்த கொலை குறித்த விசாரணையின் போது, ​​எலிசபெத்திடம் வேலை செய்தவர்களிடம் இருந்து இதயத்தைத் துளைக்கும் வகையிலான கதைகளைக் கேட்டார்கள். எலிசபெத் மற்றும் அவரது ஊழியர்கள் சும்மார் 80 கொலைகளை செய்ததாக  தண்டனை பெற்றனர். ஆனால், உண்மையில் 600 க்கும் அதிகமான கொலைகளை அவள் செய்துள்ளார். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், அரச குடும்பத்தினரை தூக்கிலிட விதி இல்லாததால், அவள் ஒரு அறையில்சிறை வைக்கப்பட்டிருந்தாள். அதன் பின்னர்  மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அவள் இறந்தாள்.

ALSO READ | சீனப்பெருஞ்சுவர் குறித்த மர்மங்களும் சுவாரஸ்யங்களும்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News