எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எது மகிழ்ச்சி? எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? எதில் எல்லாம் மகிழ்ச்சி உள்ளது என்பது தெரிவதில்லை. அது குறித்த ஆவல் இருந்தாலும் தேடல் இல்லை. விஞ்ஞான உலகில் மகிழ்ச்சி எது என்பதை கூட கூகுளில் தான் பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் மகிழ்ச்சிக்கான வழி என்ன தெரியுமா?
மகிழ்ச்சியான வாழ்க்கை ரகசியம்
ஒரு ஆப்பிரிக்க பழமொழி கூறுகிறது "நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால், தனியாக செல்லுங்கள். நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள், ”இதையே மகிழ்ச்சிக்கும் பயன்படுத்தலாம். 2,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மகிழ்ச்சிக்கான திறவுகோல் நல்ல ஆரோக்கியம் அல்ல, மாறாக நல்ல உறவுகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் வலுவான உறவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்காதாம்..!
மகிழ்ச்சியில் கவனம்
மகிழ்ச்சி நிலையானது. நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், உங்கள் சொந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். மகிழ்ச்சிக்கு உகந்த செயல்களை தொடர்ந்து செய்ய முற்படுங்கள். சிந்தனை முதல் செயல் வரை மகிழ்ச்சி நிரம்பியிருக்கும்போது நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியை பிறர் கொடுக்க முடியாது.
உணவுகளில் கவனம்
மகிழ்ச்சியாக இருக்க உணவு முறையும் அவசியம். என்ன சாப்பிடுகிறீர்களோ அதனடிப்படையில் தான் ஆரோக்கியம் மற்றும் மனநலனும் இருக்கும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். இலவங்கப்பட்டை, சாலமன் மீன்களில் மனச்சோர்வுகளை நீக்கும் சத்துகள் இருக்கின்றன. அதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்.
வேலையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 50% பணியாளர்கள் வேலை அழுத்தம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் மற்றும் தங்களுக்குள்ளான உறவுகளை பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். சக ஊழியர்களுடன் நேர்மறையான உறவுகளை வளர்ப்பது வேலையில் திருப்தியாக இருப்பதற்கான சிறந்த வழி. உங்களால் முடிந்தால் சக ஊழியரை ஆதரிக்கவும். மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ