அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி!

ப்ளிப்கார்டில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி போன்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 02:00 PM IST
  • ரூ.65,900 க்கு விறக்கப்படும் ஐபோன் 12 சலுகைகள் மூலம் ரூ.39,199க்கு விற்கப்டுகிறது.
  • எக்ஸ்சேஞ் செய்து அதிரடி விலைகுறைப்பு சலுகைகளை பெறலாம்.
  • யுபிஐ ட்ரான்ஸாக்ஷன் மூலம் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ.1000 வரை சலுகை கிடைக்கும்.
அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி! title=

ஐபோன் பிரியர்களுக்கென்றே ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி போன்ற போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கிறது.  இந்த ஷாப்பிங் தளங்கள் விலை குறைவாக மொபைல்களை அறிமுகப்படுத்துவதோடு க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு சில அதிரடி விலை குறைப்பு சலுகைகளையும் வழங்குகிறது.  ரூ.65,900 க்கு விறக்கப்படும் ஐபோன் 12 ஆனது ப்ளிப்கார்ட் தளத்தில் அதிரடி விலை சலுகைகள் மூலம் ரூ.39,199க்கு விற்கப்டுகிறது.  

மேலும் படிக்க | வெறும் ரூ.764-க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி: அசத்தும் Flipkart விற்பனை

ரூ.65,900 க்கு விறக்கப்படும்  64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12 ஆனது 18 சதவீத தள்ளுபடியுடன் ப்ளிப்கார்ட்டில் ரூ.53,999க்கு கிடைக்கிறது.  இதன் மூலம் நீங்கள் ரூ.11,901ஐ சேமிக்கலாம்.  மேலும் எக்ஸ்சேஞ் செய்து இந்த மொபைலை பெறுவதன் மூலம் அதிரடி விலைகுறைப்பு சலுகைகளை பெறலாம்.  எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் சுமார் ரூ.14,800 வரை தள்ளுபடி பெற முடியும், இதன் மூலம் மொபைலை ரூ.39,199க்கு வாங்க முடியும்.  உங்கள் இருப்பிடத்தின் சரியான பின்கோடை  பதிவிட்டு பார்ப்பதன் மூலம் உங்கள் பகுதியில் எக்ஸ்சேஞ் சலுகை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும், மேலும் எக்ஸ்சேஞ் செய்யும் மொபைலின் நிலையை பொறுத்து வேலை குறைப்பு செய்யப்படும்.

யுபிஐ ட்ரான்ஸாக்ஷன் மூலம் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ.1000 வரை சலுகை கிடைக்கும்.  ஸ்லைஸ் விசா க்ரெடிட் கார்டு பயன்படுத்தி மொபைல் வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் 1000 ருபாய் முதல் 5000 ருபாய் வரை சலுகை கிடைக்கும்.  அதேபோல எஸ் வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியுடன் 1000 ருபாய் முதல் 5000 ருபாய் வரை சலுகை கிடைக்கும்.  மேலும் ஐடிஎப்சி க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கு  10 சதவீத தள்ளுபடியுடன் 1000 ருபாய் முதல் 5000 ருபாய் வரை சலுகை கிடைக்கும்.    ஆக்சிஸ் வங்கி க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கிறது.

மேலும் 6 மாதங்களுக்கு கானா ப்ளஸ் சபஸ்க்ரிப்ஷன், டிஸ்கவரி ப்ளஸ் சபிக்ரிப்ஷனை வழங்குவதோடு, ரூ,201 மதிப்புள்ள பிட்காயினையும் வழங்குகிறது.  ரூ.59,900க்கு விற்கப்படும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12 மினி ஆனது 31 சதவீத தள்ளுபடியுடன் ரூ.41,299க்கு கிடைக்கிறது.  இதன்மூலம் நீங்கள் ரூ.18,601ஐ சேமிக்கலாம்.  மேலும் எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ஐபோன் 12 மினி ரூ.14,800 வரை விலை குறைக்கப்பட்டு ஐபோன் 12 மினி போன் ரூ.26,499க்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமை போல இனி பேஸ்புக்கிலும் ரீல்ஸ் செய்யலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News