மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா: அஜித் டோவல் தலைமையில் அவசர ஆலோசனை!!

சீனாவுடனான கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகளை டோவல் கவனித்து வருகிறார். நிலைமையை மறுபரிசீலனை செய்ய அஜித் டோவல் நேற்று ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 01:32 PM IST
  • இந்தியா சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் தொடர்கிறது.
  • இது குறித்த அஜித் டோவலின் கூட்டத்தில் உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
  • இந்திய இராணுவம் மீண்டும் LAC-யைக் கடந்து, வேண்டுமென்றே சீனாவை சீண்டியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா: அஜித் டோவல் தலைமையில் அவசர ஆலோசனை!! title=

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவல் எல்.ஏ.சி.யின் (LAC) நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகிறார். சீனாவுடனான கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகளையும் டோவல் கவனித்து வருகிறார். நிலைமையை மறுபரிசீலனை செய்ய அஜித் டோவல் (Ajit Doval) நேற்று ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில் உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர். சீனாவுடனான (China) பதட்டங்கள் குறித்து புலனாய்வு அமைப்புகள் டோவலுக்கு விளக்கமளித்தன. டோவல் சீனாவுடனான கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சுஷூலில் காலை 10 மணி முதல் ஒரு கமாண்டர் நிலையிலான கூட்டம் நடைபெறுகிறது. பாங்கொங்கில் சீனாவை விட இந்திய ராணுவம் சிறந்த நிலையில் உள்ளது. LAC-ஐ இந்தியா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஆகஸ்ட் 28-29 இரவு இந்திய வீரர்கள் பாங்கொங்கில் சீனாவுடன் மோதினர். பங்கோங்கில் இந்தோ-சீனா மோதல் (India China Clash) குறித்து சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், LAC –ஐ இந்தியா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 29-30 இரவு, லடாக்கில் பங்கோங் ஏரிக்கு தெற்கே சில பகுதிகளை சீன துருப்புக்கள் கைப்பற்ற முயன்றனர். இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புக்காக சுமார் 500 சீன வீரர்கள் வந்தனர். சீன வீரர்களிடம் கயிறுகள் மற்றும் பிற ஏறும் கருவிகள் இருந்தன. இரவின் இருளில் சீன வீரர்கள் பிளாக் டாப் மற்றும் தாகுங் ஹைட்ஸ் இடையே டேபிள் டாப் பகுதியில் ஏறத் தொடங்கினர். ஆனால் இந்திய ராணுவம் ஏற்கனவே அனைத்து வித சீன முயற்சிகளையும் எதிர்பார்த்து தயாராக இருந்தது.

இந்திய வீரர்கள் முதலில் சீன இராணுவத்தை நிறுத்தி, பின்னர் சீனாவை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்தினர். பாங்காங்கின் தாகுங் பகுதியில் துடிப்புடன் வந்த சீன வீரர்கள் இந்தியாவின் வலிமையான வீரர்களின் வலிமையைப் பார்த்து மீண்டும் பதற்றத்தில் திரும்பிச் சென்றனர். ஆனால் இந்த சம்பவத்தில், இந்திய ராணுவத்தின் (Indian Army) தரப்பிலிருந்து எந்த வித துப்பாக்கிச் சூடும் நடத்தப்படவில்லை. எந்த வீரரும் கொல்லப்படவில்லை.

ALSO READ: இந்திய சீன எல்லையில் பதற்றம், உயர் மட்ட கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி..!!!

சீனாவின் சதித்திட்டங்களை முறியடித்த இந்திய இராணுவம்.

சீனா மோசடி வேலைகளுக்கு பெயர் போன நாடு. LAC சர்ச்சையில், கால்வனின் சம்பவத்திற்குப் பிறகு சீனா மேற்கொள்ளும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் அதன் சதியின் ஒரு அங்கம்தான் என்றே தோன்றுகிறது. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் நேரம் எடுத்துக் கொண்டு, சீனா 1962 இல் இருந்ததைப் போலவே இந்தியாவை முதுகில் குத்த விரும்புகிறது.

ஆனால் இந்த முறை இந்திய இராணுவம் அனைத்து சீன சதித்திட்டங்களையும் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதற்கு பதிலளித்து வருகிறது. எனினும், கால்வானைப் போலவே, பாங்கோங் சம்பவத்திற்கும் சீனா இந்தியாவை குற்றம் சாட்டுகிறது. சீன இராணுவத்தின் மேற்கு இராணுவ கட்டளை ஒரு அறிக்கையை வெளியிட்டது. திங்களன்று, இந்திய இராணுவம் மீண்டும் LAC-யைக் கடந்து, வேண்டுமென்றே சீனாவை சீண்டியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக LAC-ஐ தாண்டிய துருப்புக்களை உடனடியாக இந்தியா திரும்ப அழைக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்யும் சதிகள் அனைத்தையும் தான் செய்துவிட்டு அடுத்தவர் மீது பழி போடும் சீனாவின் சிறுபிள்ளைத்தனம் எப்போது குறையும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது!!

ALSO READ: இந்திய சீன துருப்புகளுக்கு இடையில் லடாக்கின் பேங்காங் பகுதியில் மோதல் வெடித்தது..!!

Trending News