இனி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து, 500 அபராதம்!

மும்பையில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டினால் ரூ.500 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.  

Written by - RK Spark | Last Updated : May 25, 2022, 07:24 PM IST
  • மும்பையில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டினால் ரூ.500 அபராதம்.
  • மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
  • போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.
இனி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து, 500 அபராதம்!  title=

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு சில விதிகளை போலீசார் விதித்து வருகின்றனர்.  மும்பையில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டினால் ரூ.500 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டுமென்றும், இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளார்.

polic

மேலும் படிக்க | தரமற்ற பெட்ரோல் விற்பனை ? - சேலத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

மேலும் போலீசார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுகுறித்து பேசிய டிசிபி, கடந்த மாதம் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக போக்குவரத்து போலீசார் 75,000 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறினார்.  மேலும் கூறுகையில், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் ஒவ்வொருவரது சலானும் ஆர்டிஓ-க்கு அனுப்பப்படும் மற்றும் அவர்களுக்கு 3 மாத காலங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.  

helmet

அதனைத்தொடர்ந்து அந்த நபருக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த வீடியோக்கள் இரண்டு மணி நேரம் காண்பிக்கப்படும், அதனை அவர் பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  சமீபத்தில் சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறையினர் உதவிட்டு இருந்தனர்.  மீறுபவர்களிடம் இருந்து ரூபாய் 100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | இனி பெட்ரோல் விலை தினசரி உயரும்...ராகுல் காந்தி விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News