தூங்கும்போதும் உடல் எடையை குறைக்கலாம்: நிபுணர் கொடுத்த டிப்ஸ்....இப்படி பண்ணுங்க போதும்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க சில எளிய இயற்கையான வழிகளும் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர் ரேணு ரகேஜா, சில பழக்கங்களை கடைப்பிடித்தால், தூங்கும் செயல்முறையின் மூலமாகவும் உடலில் சேரும் கொழுப்பை குறைக்க முடியும் என்று கூறுகிறார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 11, 2024, 02:38 PM IST
  • தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழும்போது, உடல் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை சிறந்த முறையில் பயன்படுத்தத் தொடங்குகிறது.
  • இது இன்சுலின் கட்டுக்குள் இருக்கவும் உதவுகிறது.
  • இந்த பழக்கம் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
தூங்கும்போதும் உடல் எடையை குறைக்கலாம்: நிபுணர் கொடுத்த டிப்ஸ்....இப்படி பண்ணுங்க போதும் title=

Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உடல் பருமனால் ஒருவருடைய ஆளுமை குறைவதோடு பல வித உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. உடலில் சேரும் கொழுப்பு வயதுக்கு ஏற்ப பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்தால், உடனடியாக அதை சரி செய்வது அவசியம். பலர் உடல் எடையை குறைக்க ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள். ​​சிலர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் உதவியுடன் தங்கள் எடையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

உடல் எடையை குறைக்க சில எளிய இயற்கையான வழிகளும் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர் ரேணு ரகேஜா, சில பழக்கங்களை கடைப்பிடித்தால், தூங்கும் செயல்முறையின் மூலமாகவும் உடலில் சேரும் கொழுப்பை குறைக்க முடியும் என்று கூறுகிறார். இந்த முறைகளின் செயல்திறன் பற்றிய சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். அந்த முறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆழ்ந்து உறக்கம்

ஆழ்ந்த உறக்கத்தின் (Sleep) போது உடல் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. ஒவ்வொரு நாளும் 7 முதல் 8 மணி நேரத்திற்கு நாம் நன்றாக தூங்கினால், இந்த செயல்முறை மேம்படுகிறது. ஆகையால், தினமும் போதுமான அளவு நாம் துங்குவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அதேபோல் இடையூறு இல்லாத நல்ல தூக்கம் அவசியமாகும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மொபைல் போன், லேப்டாப் போன்ற கேஜெட்களை அணைத்து, படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குங்கள்

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழும்போது, உடல் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை சிறந்த முறையில் பயன்படுத்தத் தொடங்குகிறது. இது தவிர, இது இன்சுலின் கட்டுக்குள் இருக்கவும் உதவுகிறது. இந்த பழக்கம் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. இதற்கு, வார இறுதி நாட்களிலும் ஒரே நேரத்தில் தூங்குவதும் விழிப்பதும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை சுலபமா குறைக்க உதவும் இலவங்கப்பட்டை டீ: தினமும் இப்படி குடிங்க

இரவு உணவு: இந்த விஷயங்களில் கவனம் தேவை

தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவு (Dinner) உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் சாப்பிட்ட உடனேயே தூங்குவது உடல் கொழுப்பை எரிக்கும் நிலைக்கு வராமல் தடுக்கிறது. இது தவிர, உங்கள் இரவு உணவில் புரதத்தின் அளவு நன்றாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மெலிந்த புரதம் ஓய்வு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. பருப்பு வகைகள், காய்கறி சாலட், பனீர், முட்டை ஆகியவை இதற்கு ஏற்ற உணவுகளாக இருக்கும்.

இண்டர்மிடண்ட் ஃபாஸ்டிங்

இண்டர்மிடண்ட் ஃபாஸ்டிங் தூங்கும் போது கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. இந்த ஃபாஸ்டிங்கை 12 மணி நேரத்திலிருந்து தொடங்கி 14 முதல் 16 மணிநேரமாக அதிகரிக்கலாம். இதைச் செய்வதன் மூலம் உடல் ஏற்கனவே சேமிக்கப்பட்ட கொழுப்பை ஆற்றலுக்காக பயன்படுத்தத் தொடங்குகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

வலிமை பயிற்சி

பகலில் வலிமை பயிற்சி (Strength Training) செய்வதால் மசில் மாஸ் அதிகரிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது தூக்கத்தின் போது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது நல்ல உறக்கத்திற்கும் வழிவகுக்கிறது. ஜிம்மிற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே புஷ்அப்கள், பிளாங்குகள் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடாவடி யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் குறைக்க இந்த பானங்கள் குடிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News