7.5% வட்டி தரும் திட்டம்! 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்! அதிக வருவாய் தரும் KVP

post office scheme to double the money: 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாக்கும் உத்தரவாதமான வருமானம் தரும் அஞ்சலகத் திட்டம்... இதன் பிற நன்மைகளையும் தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 10, 2023, 10:37 AM IST
  • 115 மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்
  • உத்தரவாதமான வருமானம் தரும் அஞ்சலகத் திட்டம்
  • கிசான் விகாஸ் பத்திர திட்டம்
7.5% வட்டி தரும் திட்டம்! 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்! அதிக வருவாய் தரும் KVP title=

கிசான் விகாஸ் பத்திரம்: கிசான் விகாஸ் பத்ரா என்பது அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் மத்திய அரசின் திட்டமாகும், இது  உத்தரவாதமான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதிர்வுத் தொகையை கொடுக்கும் திட்டம் ஆகும்.  7.5 சதவீத வட்டியைத் தரும் இந்த திட்டத்தை ரூ. 1,000 மற்றும் ரூ.100 மடங்குகளில் தொடங்கலாம். கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்படாது. அஞ்சல முதலீட்டு திட்டமான இதற்கு அரசு உத்தரவாதம் உள்ளது.

தற்போது, சந்தையில் பணம் சம்பாதிக்க பல முதலீட்டு ஆதாரங்கள் உள்ளன. நீண்ட கால முதலீட்டில் இருந்து நல்ல வட்டியைப் பெறக்கூடிய அத்தகைய திட்டத்தை தேடுபவர்களுக்கு கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra (KVP) ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது தபால் துறையின் நல்ல சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. கேவிபியில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும் என்பது சிறப்பு.

KVP கணக்கை யார் திறக்கலாம்?
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தின் கீழ், எந்த வயது வந்த நபரும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கேவிபி கணக்கையும் திறக்கலாம்.மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபரின் பெற்றோர் கணக்கைத் திறக்கலாம்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எப்போது கொடுக்கப்படும்? யார் யாருக்கு கிடைக்கும்?

குறைந்தபட்ச முதலீடு

கிசான் விகாஸ் பத்ரா யோஜனாவில் குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம். KVP இல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்பது சிறப்பு. இந்தத் திட்டத்தின் கீழ் பல கணக்குகளைத் திறக்கலாம்.

முதலீட்டுக்கு வருவாய்

முதலீட்டுத் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். ஏனென்றால் KVP திட்டத்திற்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களுக்கு பிறகு ரூ.2 லட்சம் கிடைக்கும். கேவிபி கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ.20 லட்சமாக மாற்றலாம்.

KVP இல் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன?
பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளால் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் பாதிக்கப்படவில்லை. அரசாங்க உத்திரவாதம் உள்ளது, எனவே உங்களுக்கு வருமானம் கிடைக்குமா இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிலையான வருவாய்க்கு உத்திரவாதம் உண்டு

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் மகிழ்ச்சி: டிஏ அரியரால் அதிரடி ஏற்றம், கணக்கீடு இதோ

KVP கணக்கை எங்கு திறக்கலாம்?

எந்த தபால் நிலையத்திலும் கிசான் விகாஸ் பத்திர கணக்கைத் திறக்கலாம். KVP கணக்கு 115 மாதங்களில் முதிர்ச்சியடைகிறது ஆனால் நீங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் வரை வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

கிசான் விகாஸ் பத்ரா மூலம் பாதுகாப்பான கடனைப் பெறலாம். கிசான் விகாஸ் பத்திரக் கணக்கைத் திறக்கும்போது, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கேவிபி  விவரங்கள் ஆகியவை தேவை.

மேலும் படிக்க | IRIS Scan: விரல் ரேகை சரியா வரலியா? பரவாயில்லை! ரூட்டை மாத்தும் UIDAI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News