விற்பனையில் ஃபாரின் விஸ்கியை வீழ்த்திய.... மேட் இன் இந்தியா விஸ்கி பிராண்டுகள்... !

நாட்டில் சிங்கிள் மால்ட் விஸ்கி விற்பனையில் முதல் முறையாக உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பிராண்டுகளை முந்தியுள்ளன. Glenlivet, Macallan, Lagavulin மற்றும் Talisker போன்ற பிராண்டுகளை விட இப்போது அம்ரித், பால் ஜான், ராம்பூர், இண்ட்ரி மற்றும் கியான்சந்த் போன்ற உள்நாட்டு பிராண்டுகள் அதிகம் விற்பனை ஆகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 8, 2024, 12:28 PM IST
  • இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (CIABC) வெளியிட்டுள்ள முதற்கட்ட மதிப்பீடு.
  • சிங்கிள் மால்ட் மொத்த விற்பனையில் உள்நாட்டு பிராண்டுகளின் பங்கு 53 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • அம்ரித், பால் ஜான், ராம்பூர், இண்ட்ரி மற்றும் கியான்சந்த் போன்ற உள்நாட்டு பிராண்டுகள் அதிக விற்பனை.
விற்பனையில் ஃபாரின் விஸ்கியை வீழ்த்திய.... மேட் இன் இந்தியா விஸ்கி பிராண்டுகள்... ! title=

இந்தியா அனைத்து துறையிலும் வளர்ச்சி நடை போட்டு வரும் நிலையி, விஸ்கி விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. மேட் இன் இந்தியா நிறுவனம் விஸ்கி விற்பனை விஷயத்திலும் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் சிங்கிள் மால்ட் விஸ்கி விற்பனையில் முதல் முறையாக உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பிராண்டுகளை முந்தியுள்ளன. இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (CIABC) வெளியிட்டுள்ள முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த ஆண்டில் அதாவது 2023 ஆம் ஆண்டில், சிங்கிள் மால்ட் மொத்த விற்பனையில் உள்நாட்டு பிராண்டுகளின் பங்கு 53 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில், நாட்டில் மொத்தம் 6,75,000 சிங்கிள் மால்ட் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில், உள்நாட்டு பிராண்டுகளின் விற்பனை 3,45,000 பெட்டிகள் என்ற அளவிலும், ஸ்காட்டிஷ் மற்றும் பிற வெளிநாட்டு பிராண்டுகளின் விற்பனை 3,30,000 பெட்டிகள் என்ற அளவிலும் உள்ளது. ஒரு பெட்டியில் ஒன்பது லிட்டர் மதுபானம் இருக்கும். 

CAIBC டைரக்டர் ஜெனரல் வினோத் கிரி கூறுகையில், ‘எங்கள் மதிப்பீட்டு, 2023ல் உள்நாட்டு பிராண்டுகளின் விற்பனை சுமார் 23 சதவீதம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், விற்பனையில் மேட் இன் இந்தியா விஸ்கி செய்துள்ள இந்த சாதனை உள்நாட்டு பிராண்டுகளுக்கு ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது’ என்றார் . அம்ரித் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் இணை எம்.டி., திரிவிக்ரம் நிகம் கூறுகையில், இது போன்ற சாதனைகள் மிகவும் போற்றத் தகுந்தவை. சில வருடங்களுக்கு முன்பு நாம் கேலி செய்யப்பட்டோம். ஆனால் இப்போது தரம் மற்றும் செம்மை ஆகியவற்றில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள்ள் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். Glenlivet, Macallan, Lagavulin மற்றும் Talisker போன்ற பிராண்டுகளை விட இப்போது அம்ரித், பால் ஜான், ராம்பூர், இண்ட்ரி மற்றும் கியான்சந்த் போன்ற உள்நாட்டு பிராண்டுகள் அதிகம் விற்பனை ஆகின்றன.

உள்நாட்டு பிராண்டுகள் மீதான மோகம் அதிகரிப்பதற்கான காரணம்

மேட் இன் இந்தியா விஸ்கி தயாரிப்புகள் தற்போது பிரபலமடைந்து வருவதால், டியாஜியோ மற்றும் பெர்னோட் ரிக்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட உள்ளூர் பிராண்டுகளை அறிமுகப்படுத்துகின்றன. டியாஜியோ கோடவன் பிராண்டை 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது, அதே நேரத்தில் பெர்னாட் சமீபத்தில் தனது முதல் உள்நாட்டு சிங்கிள் மால்ட் லாங்கிட்யூட் 77 ஐ அறிமுகப்படுத்தியது. பெர்னோட் இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மஹிந்திரா கூறுகையில், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தை மற்றும் பன்முகத்தன்மை நிறைந்தது. இளைஞர்கள் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட தயாரிப்புகளை விரும்புகிறார்கள். நுகர்வோர் புதுமையை விரும்புகிறார்கள். அவர்கள் தேவையை உள்நாட்டு தயாரிப்புகள் பூர்த்தி செய்கின்றன என்றார்.

மேலும் படிக்க | Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள்

சிங்கிள் மால்ட் விஸ்கி 

கோவாவில் உள்ள ஒற்றை மால்ட் விஸ்கி தயாரிப்பு நிறுவனமான ஜான் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் தலைவர் பால் பி ஜான் கூறுகையில், உள்நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது வெளிநாட்டு நிறுவனங்களிடையே பீதியை உருவாக்குகிறது. அவர் வளஎச்சி குறித்து கூறுகையில், ' தூங்கிக் கொண்டிருந்தவர், திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து சாதனை படைக்கிறார்கள். இப்போது எங்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் குறுக்கு வழியை பின்பற்றுகிறார்கள். தங்களுக்குப் புரியாத விஷயங்களைச் செய்கிறார்கள். இந்தியாவிற்கான நேரம் வந்துவிட்டது. சிங்கிள் மால்ட் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு பிராண்டுகளை முறியடித்துள்ளன. தங்களுக்கு நிகர் இல்லை என்ற ஸ்காட்டிஷ் பிராண்டுகளின் திமிரை முறியடித்துள்ளன. ஜம்முவில் உள்ள விஸ்கி தயாரிப்பு நிறுவனமான திவான்ஸ் மாடர்ன் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் எம்டி பிரேம் திவான், இந்திய மால்ட்களின் தரம் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார். இதுவே அவர்களின் தேவை அதிகரித்து வருவதற்கு காரணம். ஸ்காட்டிஷ் பிராண்டுகள் பாரம்பரியத்திலிருந்து விலகத் தயாராக இல்லை. அதே நேரத்தில் இந்திய பிராண்டுகள் புதிய விஷயங்களைப் பரிசோதித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் போதுமான வாய்ப்பு இருப்பதாக பெர்னோடின் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 40,000 கோடி ரூபாய் வேண்டாம் என்று சொல்லி துறவறம் மேற்கொண்ட தமிழரை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://024/01/08/355808-boycottmaldives.jpgt.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://024/01/08/355808-boycottmaldives.jpgwhatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://024/01/08/355808-boycottmaldives.jpgbit.ly/3AIMb22

Apple Link: https://024/01/08/355808-boycottmaldives.jpgapple.co/3yEataJ

Trending News