இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்!

Indian Railways: சென்னை - பெங்களூரு செல்லும் வழித்தடத்தில் ஒரு பகுதியில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இனி பயணம் நேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 24, 2023, 03:39 PM IST
  • தற்போது சென்னை - பெங்களூரு பயண நேரம் வந்தே பாரத்தில் 4 மணி 30 நிமிடம் ஆகும்.
  • 110 கி.மீ., வேகத்தில் இருந்து 130 கி.மீ., வேகத்தில் ரயில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • ஆம்னி பேருந்துகளுக்கு ரயில்வே கடுமையான போட்டியாக இருக்கும்.
இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்! title=

Indian Railways: சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை (144 கி.மீ., இடைவெளி) இடையே மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இருந்து 130 கி.மீ., வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே அனுமதித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்கள் குறையும். 

தடங்கள் மற்றும் சிக்னல்கள் மேம்படுத்தப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை - அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருக்கு செல்லும் ரயில்களின் பயண நேரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றம் இருக்கும். ஏனெனில் மொத்த பயண நேரம் இப்போது நான்கு மணி நேரம் 25 நிமிடங்களில் இருந்து நான்கு மணி நேரமாக வந்தே பாரத் ரயில் பயணத்தில் குறையும் என கணிக்கப்படுகிறது.

சதாப்தி அல்லது பிருந்தாவன் விரைவு ரயில்களில் தற்போதுள்ள பயண நேரமான ஆறு மணி நேரம் தற்போது ஐந்து மணி 30 நிமிடங்களாக குறையும். பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் 124 LHB பெட்டிகள் கொண்ட 124 ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே இயக்குநரகம் மற்றும் லோகோ பைலட்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

மேலும் படிக்க | பயணிகளை குஷிப்படுத்த உள்ள இந்தியன் ரயில்வே... என்ன தெரியுமா?

LHB பெட்டிகள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயங்கும் அதே வேளையில் ICF-வடிவமைப்பு பெட்டிகள் மணிக்கு 110 கிமீ வேக வரம்பைக் கொண்டுள்ளன. பல ரயில்களில் LHB பெட்டிகள் இருப்பதால் பெங்களூரு, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், படிப்படியாக ஒவ்வொரு ரயில்களையும் அதிக வேகத்தில் இயக்க முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் சென்னை மற்றும் அரக்கோணம் இடையே மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது மேம்படுத்தப்பட்ட பாதையை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பதன் மூலம் மற்ற ரயில்களும் சிறந்த வேகத்தில் இயக்கப்படும் என்றும்  ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

"சென்னையில் இருந்து முக்கிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்த நீட்டிப்பை முடிப்பது வேலையின் ஒரு பகுதியாகும்" என தெரிவிக்கப்படுகிறது. பயண நேரத்தைக் குறைப்பது, பெங்களூரு வழித்தடத்தில் ஆம்னி பேருந்துகளின் போட்டியைக் கையாள ரயில்வேக்கு உதவும். 

வேகத்தை அதிகரிப்பது நல்லது என்றும் ஆனால் வழித்தடங்களில் நெரிசல் அல்லது பாட்டில் நெக் காரணமாக ஏற்படும் தாமதங்களைக் குறைக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். பெங்களூருக்கு அருகில் உள்ள பாதையில் வேகக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற குறைபாடுகளை ரயில்வே நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சென்னை - ரேணிகுண்டா கோட்டமும், சென்னை - கூடூர் கோட்டமும் கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 2,000 வழித்தட கி.மீக்கு மேல் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 44 ரயில்களின் வேகம் கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | கவனம் பயணிகளே... ரயிலில் டிக்கெட் எடுத்த பின் உடனே இதை சரி பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News