திமுகவை அழிக்க வந்த பிளேடு தான் விஜய் - சென்னையில் திண்டுக்கல் லியோனி பேச்சு!

DMK vs Vijay: எடப்பாடி பழனிச்சாமி என்னுடன் நேருக்கு நேர் மேடை போட்டு பேச தயாரா? திமுகவுடைய சாதனை அதிமுக சாதனை என்ன என்று பேச தயாரா? ஆர் கே நகரில் சவால் விட்ட லியோனி.

Written by - RK Spark | Last Updated : Nov 12, 2024, 10:02 AM IST
    உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
    உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு இளம் தலைவர்.
    சென்னையில் திண்டுக்கல் லியோனி பேச்சு!
திமுகவை அழிக்க வந்த பிளேடு தான் விஜய் - சென்னையில் திண்டுக்கல் லியோனி பேச்சு! title=

திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய். ஏற்கனவே வந்த 20 பிளேடுகளில், நான்கு துருப்பிடித்து கிடக்கின்றன, சில பிளேடுகள் மரத்தோடு ஒட்டி கிடக்கிறது.  சில பிளேடுகள் எதற்கு வந்தோம் என்று தெரியாமல் அனாதையாக கிடக்கிறது. 21வது பிளேடு தான் தம்பி விஜய். திமுக என்ற ஆலமரத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று தண்டையார்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். சென்னை வடக்கு மாவட்டம் ஆர்கே நகர் கிழக்கு பகுதி திமுக சார்பில் பகுதிச் செயலாளர் லட்சுமணன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் முன்னிலையில் தண்டையார்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல்  தலைவர் திண்டுக்கல் லியோனி, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்டி சேகர் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு 20 பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். 

மேலும் படிக்க | Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, நேருக்கு நேர் தமிழக முதலமைச்சர் என்னுடன் பேசத் தயாராக என எடப்பாடி பழனிசாமி சவால் விட்டு உள்ளார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் வேணாலும் வருகிறேன் என்று கூறினார். ஆனால்  கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் முதலமைச்சர் போக வேண்டாம், துணை முதலமைச்சர் போக வேண்டாம் நான் இருக்கேன். எடப்பாடி பழனிச்சாமியை அவரது ஊரான எடப்பாடியில் மேடை போட்டு பேசுவோமா என்று கேள்வி எழுப்பினார். ஆர்கே நகரில்  எடப்பாடிக்கு சவால் விடுகிறேன். எடப்பாடி ஊரில் மேடை போட்டு திமுகவுடைய சாதனை அதிமுக சாதனை என்ன என்று பேச தயாரா மக்கள் யாருக்கு கைதட்டி அதிகமாக ஓட்டு போடுகிறார் என்பதை இப்போது தீர்மானிக்கலாமா என்று சவால் விட்டார்.

உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மூட நம்பிக்கையும் பெண் அடிமைக்கும் எதிராக முதன் முதலாக குரல் கொடுத்த இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்தார். விஜய் மாநாட்டில் ஓடி வந்த விஜய்க்கு கூட்டத்தினர் கட்சித் துண்டை வீசினர். இவரும் அதை கூட்டத்தில் வீசினார், ஆனால் அதைக்கூட கவனிக்காமல் பின்னால் வந்தவர்கள் அதை மிதித்து கொண்டு வந்தார்கள். முதல் மாநாட்டில்  கட்சி துண்டு பலரால் மிதிபட்டது கூட கவனிக்காமல் நடக்கிறது. இது எல்லாம் மாநாடாக என்று கேள்வி எழுப்பினார். சென்னை கோட்டை வரைந்து அந்த கோட்டைகள் ஓடுகிறார், அந்த டுபாக்கூர் பொம்மை கோட்டைக்குள் ஓடுவதற்கு 800 மீட்டர் ஓட வேண்டி இருந்தது. 

சார்ஜ் கோட்டை பிடிப்பதற்கு எத்தனை மீட்டர் தூரம் ஓட வேண்டும் ப்ரோ என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.  எவன் நீண்ட தூரம் ஓடி வருகின்றானோ அவனால் தான் உயரத்தை தாண்ட முடியும் என்று சொன்னவர் கலைஞர் யார் நீண்ட தூரம் ஓடி வருகின்றானோ அதிக நீளத்தை தாண்ட முடியும் என்று கூறினார்.  ஒடுக்கப்பட்ட மக்களை உரிமையை ஒடுக்குவதற்காகவும் அவர்களின் நசுக்குவதற்காகவும் பாடுபட்டவர் டாக்டர் அம்பேத்கார். ஒடுக்கப்பட்டமக்களை மேலும் ஒடுக்க பாடுபட்டவர் அம்பேத்காரா இதிலிருந்து மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் என்று தெரிகிறது. திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் நீங்கள். ஏற்கனவே 20 பிளேடுகள் வந்து அதில் நான்கு  துருப்பிடித்து கிடக்கின்றன  சில பிளேடுகள் மரத்தோடு ஒட்டி கிடக்கிறது. 

 சில பிளேடுகள் எதற்கு வந்தோம் என்று தெரியாமல் அனாதையாக கிடக்கிறது. 21வது பிளேடு தான் தம்பி விஜய் திமுக என்ற ஆலமரத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது . எங்கள் திராவிடம் மாடல் முதலமைச்சர்  திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களை உரிமைத்தொகை வாங்கிக் கொண்டிருக்கும்  1.15 பெண்கள் முதலமைச்சர் பக்கம்  இருந்து கொண்டே இருப்பார்கள். ஐந்து தொகுதியில் டெபாசிட் போன பிறகு எடப்பாடி பழனிச்சாமி என்ற பொய் பேசும் புளுகு மூட்டை எடப்பாடிக்கு சவால் விடுகிறேன் எடப்பாடியும் வேண்டாம் திண்டுக்கல்லும்  வேண்டாம் ஆர்கே நகரில் மேடை போட தயாரா என்னுடன் பேச தயாரா என்று கேள்வி எழுப்பினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது வருகின்ற 2026 இல் 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்... சீமான் கொந்தளிப்பு - காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News