மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். பெரும்பாலும் கொசுக்கள் மழைக்காலத்திலும் அல்லது குப்பைகள் அதிகமாக குவிந்து இருக்கும் பகுதிகளிலும் பலகி பெருகுகின்றன. பொதுவாக கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது என்பது ஒரு சவாலான விஷயம் தான். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் கொசுக் கடியிலிருந்து தப்பிப்பது கடினம்.
கொசுக்கள் மூலமாக மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான் நோய்கள் பரவுகிறது. இந்நிலையில், கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பக்க விளைவுகளை கொடுக்கக் கூடிய கொசு விரட்டி சுருள்கள், இராசயனங்கள், க்ரீம்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையான, பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம்.
கொசுக்கள் வராமல் இருக்க, சுற்றுசூழலை பாதிக்காத, அதே சமயம் பக்க விளைவுகள் எதையும் கொடுக்காத பாதுகாப்பான நடைமுறையை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் இந்த நோயை உண்டாக்கும் (Health Tips) கொசுக்களிடமிருந்து உங்களை எளிதாக பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கு சில 5 செடிகளை உங்கள் தோட்டத்தில் அல்லது பால்கனியில் நட வேண்டும், இவை வீட்டிற்கு அழகை கொடுப்பதுடன், கொசுக்களைக் விரட்ட உதவுகின்றன.
துளசி
சிறந்த ஒரு நறுமண தாவரமான துளசி, மருத்துவ குணங்கள் நிறைந்த சிறந்த செடி. அதன் வாசனை ஈக்கள் மற்றும் கொசுக்களை வர விடாமல் தடுக்கிறது. கொசுக்களை விரட்ட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகளை கசக்கி சருமத்தில் தடவுவதும் பலன் தரும்.
ஆப்பிரிக்க மேரிகோல்ட் என்னும் துலுக்க சாமந்தி (African Marigold)
ஆப்பிரிக்க மேரிகோல்ட் என்பது மிக எளிதாக வளரக் கூடிய செடி. வருடம் முழுவதும் பூக்களை கொடுக்கக் கூடியது. கொசுக்கள் அதன் வாசனையை விரும்புவதில்லை. இதன் காரணமாக அவை உங்கள் வீட்டை நெருங்காமல் ஓடி விடும்.
கற்பூரவல்லி
எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது கற்பூரவல்லி. மருத்துவ குணங்கள் நிறைந்த இதனை வளர்க்க நிறைய இடமும் தேவையில்லை. பொருள் செலவும் இல்லை. இந்த செடியின் வாசம் கொசுவுக்குப் பிடிக்காது.
மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
சிட்ரோனெல்லா ஓடோமஸ் (Citronella odomus)
சிட்ரோனெல்லா ஓடோமஸின் இலைகள் வெவ்வேறு வகையான வாசனையை வெளியிடுகின்றன. இது கொசுக்களைத் விரட்டுவதில் சிறப்பாக செய்கிறது. இந்த செடியிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்த செடிகள் எந்த பருவத்திலும் வளரக்கூடியவை. இதனால் ஆண்டு முழுவதும் கொசுக்கள் வராமல் இருக்க மிகவும் ஏற்றதாக இருக்கும்.
மாரிகோல்டு
கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்த செடியை வீட்டில் நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து தப்பிக்கலாம் இந்தச் செடி இருக்கிற இடத்தில் கொசு மடும்மல்ல, தாவரங்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகளும் அண்டாது.
ரோஸ்மேரி
அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்த செடி கொசுக்களை விரட்ட சிறந்தது. நீங்கள் தோட்டத்திலோ பால்கனியிலோ இதை வைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜாக்கிரதை ! தூக்கத்தில் திடீரென்று கீழே விழுவதுபோன்ற கனவா !!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ