Weight loss tips Tamil | சமீபகாலமாக ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் வேகமாக பரவிக் கொண்டிருக்கறிது. இது எதுக்காக என்றால்? உடல் எடையை குறைக்க நடிகை வித்யா பாலன் பின்பற்றிய டையட் முறை. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வித்யா பாலன், வெயிட் குறைக்க முடியாமல் மிகவும் சிரமபட்டேன். ஆனால், ஆன்ட்டி இன்ஃப்லமேட்டரி டயட் எடுத்தேன், அதுக்கப்பறம் என்னோட வாழ்க்கை முறையே மாறிடுச்சு என சொல்லியிருந்தாங்க. அவரின் அந்த பேட்டிக்கு பிறகு ஆன்ட்டி இன்ஃப்லமேட்ஷன் டயட் என்றால் என்ன? என எல்லோரும் தேட தொடங்கிவிட்டார்கள். இந்த வார்த்தையும் இப்போது பேமஸ் ஆகிவிட்டது. அதற்கு முதலில் இன்ஃபலமேஷன் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
உடலில் ஏதோ சின்ன காயம் ஏற்பட்டால், கிருமி தாக்கம் ஏற்பட்டால் உருவாவது தான் இன்ஃபலமேஷன். இதனை சரிசெய்யவதற்கான கடைபிடிக்கப்படும் மருத்துவ முறைதான் ஆன்ட்டி இன்பலமேஷன் முறை. அதுக்காக காயம் ஏற்பட்டால் உடனே ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் எடுத்தால் சரியாகிடுமா என்றால், அப்படி எல்லாம் ஆகாது. அதைப் போலவே, வெயிட் லாஸ் பண்ணனும்னா நாம உடம்புல ஒரு கலோரி தட்டுப்பாடு ஏற்படுத்துறோம். கலோரி தட்டுப்பாடு ஏற்படுத்தும் போது நம்ம உடம்புல ஸ்டோர் ஆயிருக்கக் கூடிய அந்த கொழுப்புகள் எரிசக்தியாக மாறி அந்த தட்டுப்பாட்டை சரி செய்யும். அதேநேரத்துல கலோரிகளை குறைப்பதால் மட்டுமே வெயிட் லாஸ் பண்ணியிர முடியுமா? என்றால் அதுவும் இல்லை. அப்படி இருந்தால் எல்லோரும் இதேபோல் செய்து சீக்கிரம் உடல் எடையை குறைத்துவிடுவார்கள். ஆனால், ஏன் இதனை எல்லோராலும் செய்து வெயிட் குறைக்கமுடியவில்லை?.
மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
கலோரியை குறைப்பது என்பது உடல் எடையை குறைப்பதில் அடிப்படை. அதனுடன் சேர்த்து நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மிகவும் முக்கியமானது. அது பசியை தூண்டாமல், தலைவலி, மனச்சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தாத உணவுகளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் டையட்டை நீண்ட நாட்களுக்கு கடைபிடிக்க முடியாது. வெயிட் லாஸ் முயற்சியின்போது கலோரிகளை கட்டுப்படுத்தும் அதேவேளையில் பசியை கட்டுபடுத்த என்ன செய்கிறோம்?, ஹார்மோன் பேலன்ஸ் எப்படி சரிசெய்கிறோம்?, இன்சுலின் சுரப்பை எப்படி கட்டுப்படுத்துகிறோம்? என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தவகையில் தான் ஆன்டி இன்ஃலமேஷன் டையட்டில் சில உணவுகளை பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆன்டி இன்பஃலமேஷன் டையட்டில், மஞ்சள், இஞ்சி, பூண்டு, ஆலீவ் ஆயில் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது, நார்ச்சத்து மிக்க, ஊட்டசத்து உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், நட்ஸ் உணவுகள் சாப்பிட வேண்டும். இன்சுலினை கட்டுப்படுத்தவும் நல்ல புரத உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக மாவுச்சத்து உணவுகள் வேண்டவே வேண்டாம் என சொல்கிறார்கள். இது உண்மைதான். ஆனால் இவை எல்லாம் வழக்கமாக சாப்பிடுவது தான். இதனை தான் கொஞ்சம் பாலிஷாக ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டயட் சொல்கிறார்கள். மார்க்கெட்டிங்கில் புதிதாக உருவாகியிருக்க உத்தி அவ்வளவு தான்.
எல்லா மசாலா பொருட்களிலும் ஆன்டி இன்ஃபலமேஷன் அம்சங்கள் இருக்கின்றன. அதனை எல்லாம் தினமும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம். அப்படியிருந்தும் உடல் எடை அதிகரிப்பு, ஹார்ட் அட்டாக், கொழுப்பு அதிகரிப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் எல்லாம் ஏன் வருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நாம் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை, உணவு முறை தான். உடல் எடையை குறைக்க முடிவெடுத்துவிட்டால் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள், காய்கறி, பழங்கள் நிறைந்த தினசரி உணவு முறை, தினமும் உடற்பயிற்சி என கடைபிடித்தாலே நிச்சயம் உடல் எடையை குறைத்துவிடலாம். அந்தவகையில் ஆன்ட்டி இன்ஃபலமேஷன் டையட் என்பதெல்லாம் புதிய கான்செப்ட் எல்லாம் இல்லை, பழைய பர்னிச்சர் தான்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ