Amaran Movie OTT Release Date Latest Updates: இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் (Rashtriya Rifles) படைப்பிரிவில் இருந்து காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் முக்கிய வீரராக இருந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் 2014ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளிடம் இருந்து பொதுமக்களை காக்கும் முயற்சியில் உயிர்தியாகம் செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலும், காஷ்மீரில் அவர் ஆற்றி வந்த பணியின் சிறப்பையும் எடுத்துக்கூறும் வகையிலும் அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டு, தற்போது திரையரங்குகளில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கியவரும், ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்தவருமான ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பிக்பாஸ் தமிழ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இவர் இயக்கியிருக்கிறார். தற்போது அமரன் திரைப்படம் வெளியான பின்னர் தனுஷின் 55ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பையும் ராஜ்குமார் பெரியசாமி பெற்றுள்ளார், அந்த படத்தின் பூஜையும் சில நாள்களுக்கு முன் போடப்பட்டது.
சாய் பல்லவிக்கு தேசிய விருது...?
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி என பல நடிகர்கள் அமரன் திரைப்படத்தில் நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், முகுந்தின் மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் ஆக சாய் பல்லவி (Sai Pallavi) வேறொரு பரிமாணத்தை வெளிக்காட்டி உள்ளார். நிச்சயம் அமரன் திரைப்படத்திற்கு சாய் பல்லவி தேசிய விருதை வெல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கருத்தின் மீது பல்வேறு முரண்பாடுகள், மாற்றுக் கருத்துகள் எழுந்தாலும் கூட தரமான படைப்பாக உருவாகியிருப்பதால் ரசிகர்கள் தரப்பில் திரையரங்குகளிலேயே பயங்கரமான வரவேற்பு இருக்கிறது.
கடந்த அக். 31ஆம் தேதி தீபாவளி அன்று அமரன் (Amaran) திரைப்படம் வெளியாகி தற்போது வரை உலகெங்கும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவத்தினத்திற்கு அமரன் திரைப்படமும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளது எனலாம். இன்னும் திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் குறையாமல் வந்துகொண்டே இருக்கின்றன.
அமரன் ஓடிடி ரிலீஸ்
வரும் நவ. 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படம் (Ganguva Movie) உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது. ஒருவேளை கங்குவா திரைப்படமும் பெரிய வெற்றியை குவிக்கும்பட்சத்தில், அமரன் திரைப்படத்திற்கு கூட்டம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமரன் திரைப்படம் வரும் நவ.28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Exclusive- Huge! #Amaran #OTT streaming pushed by a week! The @Siva_Kartikeyan blockbuster was supposed to to be streaming 28 days after release. Now seeing its phenomenal run in theatres, #Netflix has pushed the OTT premiere by a week! First time happening for a Tamil film! pic.twitter.com/y0yM0hGFYN— Sreedhar Pillai (@sri50) November 11, 2024
தள்ளிப்போகும் அமரன் ஓடிடி ரிலீஸ்...?ட
இருப்பினும், மக்கள் கூட்டம் குறையாததை கணக்கிட்டும், திரையரங்குகளின் கோரிக்கையை மனதில் வைத்தும் அமரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு (Amaran OTT Release Date) தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நவ. 28ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருந்த அமரன் திரைப்படம், ஓரிரு வாரங்களுக்கு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. அதன்படி, டிசம்பர் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ இத்திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமரன் படத்தால் எழுந்த புதிய சர்ச்சை! இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ