Diabetes Control Tips: உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இது ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. எனினும், சில பழங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில பழங்கள் இவைதான்
அன்னாசிப்பழம் (Pineapple)
அன்னாசிப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதை உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிக அதிகமாகும். இதன் காரணமாக இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகின்றது. அன்னாசிப்பழத்தை உட்கொள்வது இன்சுலின் அளவுகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தும். இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை சீர்குலைக்கும்.
மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க... இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க
திராட்சை (Grapes)
திராட்சையில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளது. இது சுகர் நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். திராட்சை சாப்பிடுவது சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான அறிகுறியாகும். நீரிழிவு நோயாளிகள் திராட்சையை தவிர்ப்பது நல்லது, அல்லது இதை மிகக் குறைவாக உட்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்ள்.
மாம்பழம் (Mango)
மாம்பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கபப்டுகின்றது. ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு ஆபத்தான பழமாகும். மாம்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. ஆகையால், இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மாம்பழத்தை உட்கொள்வது உடலில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வாழைப்பழம் (Banana)
வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகமாக உள்ளது. அதன் கிளைசெமிக் குறியீட்டு எண் மீடியம் முதல் ஹை வரை இருக்கக்கூடும். வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் பொருத்தமற்றதாக கருதப்படுகின்றது.
ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை
நீரிழிவு நோயாளிகள் பழங்களை கவனமாக உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களுக்கு பதிலாக, ஆப்பிள், பெர்ரி அல்லது பப்பாளி போன்ற குறைந்த ஜிஐ கொண்ட பழங்களை உட்கொள்ளலாம். பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இதன் மூலம் சுகர் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் ஓமம்: இப்படி உட்கொண்டால் அதிக பயன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ