இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, ஊபர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான கோஸ்ரோவ்சாஹியை (Mr Khosrowshahi), சந்தித்தார். இவர்களது சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் தகவலை பகிர்ந்து கொண்டார் தொழிலதிபர் அதானி. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், பொருளாதாரத்தின் மேற்கொள்ள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பாராட்டுகளை தெரிவித்த அதானி மற்றும் கோஸ்ரோவ்சாஹி, இந்தியாவில் தொழிலை விரிவிபடுத்துவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.
தொழிலதிபர், கவுதம் அதானி, ஊபரின் வளர்ச்சி குறித்து குறிப்பிடுகையில், ஊபர் இந்தியாவில் வளர்ந்து வருவது உண்மையிலேயே மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாக உள்ளது என்றும், இந்திய வாகன ஓட்டுனர்களின் வாழ்க்கையையும் மதிப்பையும் கூட்டுவதில், ஊபர் நிறுவனம் காட்டும் முக்கியத்துவம் பாராட்டத் தகுந்தது என்றும் குறிப்பிட்டார். ஊபர் இந்தியாவுடன் கூட்டாக சேர்ந்து பணியாற்றுவது குறித்து தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டாக்ஸி சேவை தவிர, விமான முன்பதிவு, விடுமுறைக்கான பேக்கேஜுகள், விமான நிலைய சேவைகள் போன்ற சேவைகளை வழங்கும் உபர் நிறுவனம் அதானி குழுமத்துடன் இணைந்து, அதானி ஒன் விரிவாக்கத்திற்கு உதவும். மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பசுமை ஆற்றல் மாற்றத்திற்காக சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய, அதானி திட்டமிட்டு வருகிறது என கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி திறன் 10 GW என்ற அளவில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுப்பித்தக்க எரியாற்றலுக்கு, இந்தியா முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முழுமையாக மாற உபர் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஊபர் நிறுவன குறிப்பிட்டார். உபர் நிறுவனம் 2040 ஆம் ஆண்டுக்குள், ஜீரோ எமிஷன் என்னும் வகையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்சார வாகனங்களை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டார். அதானி குழுமம் மின்சார பயணிகள் வாகனங்கள் துறையில் நுழைய திட்டமிட்டு வரும் நிலையில், ஊபர் உடனான ஒத்துழைப்பு இதை மேலும் துரிதப்படுத்தும் என கூறப்படுகிறது.
An absolutely terrific conversation with @gautam_adani over delicious breakfast about India’s phenomenal growth and rising entrepreneurship. @Uber is committed to scaling up shared mobility and accelerating transition to EVs - looking forward to take our partnership to the next… https://t.co/0g6uSYEWh8
— dara khosrowshahi (@dkhos) February 24, 2024
கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த உபர் நிறுவனம், 125 நகரங்களில் தனது சேவையில் அளித்து வருகிறது. உபர் நிறுவனத்துடன் நீங்க சுமார் 8 லட்சம் இந்தியர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். உபரின் போட்டி நிறுவனமான ஓலா நிறுவனமும், மின்சார வாகனங்கள் துறையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ONDC உடன் கை கோர்க்கும் Uber
இதற்கிடையில், உபெர் தலைமை நிர்வாக அதிகாரி கோஸ்ரோஷாஹியின் இந்திய வருகையின் போது, சமீபத்தில், Uber டிஜிட்டல் வர்த்தகத்திற்கான அரசாங்க ஆதரவு திறந்த நெட்வொர்க்குடன் (ONDC) ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. சாமன்ய மக்களுக்கான வர்த்தகமாக டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகமயமாக்கும் ONDC இன் நோக்கமும், ஊபரில் குறிக்கோளும் ஒத்துப்போகிறது. ONDC உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எங்கள் லட்சியத்தை நாங்க விரைவுபடுத்தலாம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | துவாரகா... கடலுக்கடியில் பிரதமர் மோடி செய்த பூஜை... உங்களுக்கும் செல்ல ஆசையா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ