பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்?

Pakistan Elections 2024: பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது....பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் எப்போது வரும்? என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2024, 03:44 PM IST
  • பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்
  • பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு
  • தேர்தல் முடிவுகள் எப்போது?
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்? title=

புதுடெல்லி: இன்னும் இரண்டு நாட்களில் அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண சட்டசபைகளுக்கும் அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் தேதி அனைவருக்கும் தெரியும் என்றாலும் தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது தெரியாது. அதற்கு காரணம் ஆச்சரியமானது. பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் 2024

இந்தத் தேர்தலில் மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகள் இவை.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்

பாகிஸ்தான் தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தற்போது சிறையில் இருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf (PTI)) கட்சி தேர்தலில் வெற்றி பெறுமா? இந்தக் கேள்விக்கு பதில் எப்போது தெரியும் என்பது அவருக்கே தெரியாது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) 

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) தேர்தலில் போட்டியிடுகிறது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party (PPP)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (பிபிபி) தேர்தல் களத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!

தேர்தல் முடிவுகள் எப்போது வரும்?
பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 14 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. தேர்தல் சட்டத்தின் 98வது பிரிவின் கீழ், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 14 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிட வேண்டும். பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாகிஸ்தானில் பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்பாளர்கள் எண்ணிக்கை

18,000 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்ய, பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 12.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். தேசிய சட்டமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 18,000 வேட்பாளர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும். பாகிஸ்தான் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த பொதுத் தேர்தல் பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, அண்டை நாடான இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானது ஆகும்.

ஆனால், தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், அந்நாட்டில் ராணுவத்தின் கை ஓங்கியிருப்பதால், அரசியல் கட்சிகள் என்ன செய்துவிட முடியும் என்பது மிகப் பெரிய கேள்வியாகும். ஏனென்றால், பாகிஸ்தான் தேர்தலுக்கு முன்னதாக இம்ரான் கானுக்கு ஒரே வாரத்தில் மூன்று வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், அவர் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இம்ரான் கானின் மனைவியும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரும் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் முகமது குரேஷிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியுறவு அமைச்சராக பதவியில் இருந்தபோது அரசு ரகசியங்களை கசிய விட்டது தொடர்பான வழக்கில் முகமது குரேஷிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இஸ்லாமிய விதிமுறைகளை மீறிய திருமணம்: இம்ரான் கான் & மனைவிக்கும் ஏழாண்டு சிறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News