Vatican: நட்பின் அடையாளமாக பார்த்தீனான் கோவிலை சேர்ந்த 3 சிலைகளைத் திரும்பத் தருமாறு போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. கிரேக்க நாட்டின் பழங்கால கலைப் பொருட்கள், 2500 ஆண்டுகள் பழமையான் பள்ளிவாசலைச் சேர்ந்தது. பள்ளிவாசலாக மாற்றப்படுவதற்கு முன், புனித தேவாலயமாக இருந்த பாரம்பரிய மதத் தலம் பார்த்தினன் (Parthenon), கிரேக்க நாட்டின் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும்.
கருவூலம், கிரேக்க பாரம்பரியம் கொண்ட ஆலயம், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய பள்ளிவாசல் என சரித்திரத்தின் அனைத்து மாற்றங்களையும் பதிவு செய்யும் ஒரு தொன்மையான நினைவுச்சின்னம், பார்த்தினான் கட்டமைப்பு என்று கூறலாம்.
ஏதெனியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் கி.மு 447 ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய மதத்தலத்தின் கட்டுமானமப் பணி தொடங்கி, கி.மு.432ஆம் ஆண்டில் கோயில் முழுமையாக மக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று உச்ச நிலைகளில் ஒன்றான டோரிக் கட்டட அமைப்பின் அருமையான எடுத்துக்காட்டு இந்த ஆலயம் என்பது குறிப்பிடத்தது.
பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும், உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது.
நட்பின் அடையாளமாக, ஏதென்ஸில் உள்ள பார்த்தீனான் கோவிலை சேர்ந்த 3 சிலைகளைத் திருப்பித் தருமாறு போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார் என்று வத்திக்கான் வெள்ளிக்கிழமை (2022 டிசம்பர் 16) தெரிவித்துள்ளது. இந்த மூன்று கலாச்சார பாரம்பரியம் மிக்க 3 பொருட்களும் எப்போது திரும்பக் கொடுக்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று AFP செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | நாட்டை விட்டு ஓடிய கத்தார் இளவரசி... காரணம் என்ன!
போப்பாண்டவரின் கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் வத்திக்கான் அருங்காட்சியகங்கள் பல நூற்றாண்டுகளாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான அக்ரோபோலிஸில், 3 பார்த்தினன் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாரம்பரிய முக்கியத்துவம் கொண்ட கிரேக்கத்தின் கலாச்சார அடையாளங்களை, ஏதெனின் ஆர்த்தடாக்ஸ் பேராயருக்கு "நன்கொடை" கொடுக்க போப் முடிவு செய்தார். மதங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான "ஒரு உறுதியான அடையாளமாக" இந்த பொருட்கள் வழங்குவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
1687 ஆம் ஆண்டு தாக்கப்பட்டு சூறையாடப்பட்டதிலிருந்து, பார்த்தினன், ஆலயம் வழிபாட்டுத் தலமாக இல்லை. சூறையாடப்பட்ட இந்த உலக பாரம்பரிய ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்டப் பொருட்கள், உலகின் பல முக்கிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
காவல் தெய்வமான கன்னித்தாய் அதீனாவின் தேரில் இருந்த நான்கு குதிரைகளில் ஒன்றும், ஏதென் ஸ்தாபனத்திற்கான ஊர்வலத்தில் பங்கேற்றதாக சித்தரிக்கப்படும் குழந்தையின் தலை, மற்றும் மற்றொன்று தாடி வைத்த மனிதன் சிலை என மூன்று சிலைகளை போப் தற்போது நன்கொடையாக கொடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Malaysia Landslide : நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி!
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்களை மீட்டெடுக்க கிரேக்கம் முயற்சிக்கிறது. இதேபோன்ற ஒரு முயற்சியில், வெகு காலத்திற்கு முன்னதாகவே, வாடிகனிடம் இருந்த பார்த்தினன் கோவிலின் ஒரு கலாச்சார சிலை ஒன்று 2008ஆம் ஆண்டில் கிரேக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக, அதிகாரப்பூர்வ வத்திக்கான் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.
பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும், உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது. பாரசீக படையெடுப்பாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்காகவும், வெற்றியை பெற்றுக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும், பார்த்தினன் மற்றும் அக்ரோபோலிசில் இந்த நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டதாக சரித்திரம் சொல்கிறது.
டெலியன் கூட்டணியின் கருவூலமாக இருந்த இந்த ஆலயம், பின்னர் அது ஏதேன் பேரரசு ஆனது. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. பிறகு, 1460களின் தொடக்கத்தில் ஒட்டோமான் வெற்றிக்குப் பிறகு, கன்னித்தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயம் பள்ளிவாசலாக மாறியது.
கருவூலம், தேவாலயம், பள்ளிவாசல் என நீண்ட வரலாறு கொண்ட பார்த்தினான் மதத் தலம், 1687 ஆம் ஆண்டு. நடைபெற்ற துருக்கியப் போரில் சேதப்படுத்தப்பட்டது. கோயிலின் சீரழிந்த பகுதிகளை சிரமைக்கும் முயற்சிகளை கிரேக்க அரசு தற்போது மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | டிசம்பரில் 3 முறை நிலை மாறும் புதன்... பண மழையில் நனையப் போகும் ‘3’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ