Shocking: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்தது SII நிறுவனம்

தொற்றின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரிக்க சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2021, 02:04 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக வீசி வருகிறது.
  • கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரிக்க சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
  • அரசாங்கம் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
Shocking: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்தது SII நிறுவனம் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக வீசி வருகிறது. ஒரு புறம் தடுப்பூசி செயல்முறை முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொற்றின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரிக்க சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இனி கோவிஷீல்ட்டின் விலை அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸுக்கு ரூ .400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ .600 ஆகவும் இருக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) புதன்கிழமை அறிவித்தது. COVID-19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசாங்கம் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி (Vaccine) தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து தேவையான தடுப்பூசிகள் கிடைக்கப்படுவதை நிறுவனம் உறுதி செய்யும் என்று கூறியுள்ளது. 

ALSO READ: தடுப்பூசி பற்றாக்குறை! புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் தமிழகம் வருகை!

இதுவரை, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு நாட்டில் பயன்படுத்த மூன்று தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. SII தயாரித்த 'கோவிட்ஷீல்ட்', பாரத் பயோடெக் தயாரித்த 'கோவாக்சின்' ஆகியவற்றைத் தவிர, மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் இந்தியா (DCGI) ஏப்ரல் 13 அன்று மூன்றாவது கோவிட் -19 (COVID-19) தடுப்பூசியான Sputnik-V-யின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

அரசாங்கத்தின் புதிய கொள்கையின்படி, தடுப்பூசி அளவுகளில் 50 சதவீதம் மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்திற்கு தனியாக வைக்கப்படும். மீதமுள்ளவை மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையில் பிரித்து அளிக்கப்படும். 

"வரும் நாட்களில், நாங்கள் தயாரிக்கும் டோஸ்களில் 50 சதவீதம் இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்படும், மீதமுள்ள 50 சதவீத திறன் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பிரித்து அளிக்கப்படும்" என்று அறிக்கையையில் கூறப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி மிகவும் மலிவானதாக உள்ளது என்றும் SII மேலும் உறுதியளித்தது.

ALSO READ: Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News