Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...

தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 11, 2021, 05:16 PM IST
  • 5 தடுப்பூசிகள் 5 மாதத்தில்...
  • தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு மும்முரம்
  • அக்டோபருக்கும் இன்னும் 5 தடுப்பூசிகள் வந்துவிடும்
Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்... title=

புதுடெல்லி: கொரோனாவின் தாக்கமும் வீரியமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே அச்சமும் அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு ஆறுதலாக கடந்த ஆண்டு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது இருந்த நிலைமை தற்போது முன்னேறியுள்ளது.

அதற்கு காரணம் கொடிய கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் தான். இந்தியாவில் கோவிஷீல்டு (Covshield) மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு பரவலாக போட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்ப்டுகின்றன. இருந்தாலும், போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லாததால், முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோர், களப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. 

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி (Vaccine) அனைவருக்கும் போடுவதற்கு போதுமான அளவு இல்லை எப பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் இன்று சில இடங்களில் கொரோனா தடுப்பூசியை கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு, சந்தேகத்திற்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Also Read | Corona Symptoms: மாறிய கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசில் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, நோவாக்ஸ் தடுப்பூசி, ஜைடஸ் காடில்லா தடுப்பூசி, ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இன்ட்ராநாசல் தடுப்பூசி என 5 தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் புழக்கத்தில் வந்துவிடும். 

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவை குறித்து மத்திய அரசு கவனத்துடன் ஆராயும். இந்தியா தொடர்ந்து உலகின் தடுப்பு மருந்து மையமாக திகழ்வதற்கும், உலகின் சிறந்த மருந்துகள் இந்தியர்களுக்கு கிடைப்பதற்கும் உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் எதையும் நிறுத்தாமல் மருந்து தயாரிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. 

 கொரோனா (Coronavirus) தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவி, நிதி ஆதாரம் மற்றும் பரிசோதனை செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News