உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி!!
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடி ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து, எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், டென்மார்க்கின் ஹன்ஸ்-கிரிஸ்டியன் விட்டிங்கசை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து-க்கு பத்மபூஷன் விருது அளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், பாருப்பள்ளி காஷ்யப், பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கொரியா ஓபன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து, ஜப்பான் ஓபன் தொடரிலும் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அதேபோல சாய்னா நேவால் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார? எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.