How To Get Promotion In Your Job : ஒருவருக்கு கிடைக்கும் வேலை என்பது, அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்வில் தன்னம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. அந்த வேலையில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்திருந்தால் மட்டுமே அது அவருக்கு சரியான வேலையாக இருக்க முடியும். இது, ஒருவருக்கு சுதந்திர உணர்வை கொடுப்பதோடு மட்டுமன்றி, அவர்களை சிறந்த அனுபவசாலியாகவும் மாறுகிறது. அந்த வேலையில் முன்னேற்றம் கிடைத்தால்தான் சம்பள உயர்வு, தலைமைப்பதவி, என அனைத்தும் கிடைக்கும். அது மட்டுமன்றி, இதை வைத்து, நம் தொழில் நெட்வர்க்கையும் வளர்த்துக்கொள்ளலாம். அனைவருமே, தனக்கு பதவி உயர்வு வேண்டுமென நினைப்பவர்கள்தான், ஆனால் அனைவருக்கும் இது கிடைத்து விடுகிறதா? இல்லை. வெகு சிலருக்கு மட்டும்தான் இது கிடைக்கிறது. அந்த வகையில், பதவி உயர்வை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும செய்ய வேண்டும் தெரியுமா?
உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்:
உங்கள் மதிப்புகளும் நீங்கள் செய்யும் வேலைகளும் ஒத்துப்போகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
உங்களிடம் இருக்கும் திறன் என்ன? நீங்கள் பார்க்கும் வேலை அதற்கு ஒத்துப்போகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
உங்கள் வேலையில், நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் விஷயங்கள், உங்களால் செய்ய முடிந்த விஷயங்கள், உங்களுக்கு தொடர்புடைய வேலைகள் உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும்.
உங்கள் வேலையில் எது உங்களுக்கு தேவையானது அல்லது முக்கியமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அதை நோக்கி ஓட வேண்டும்.
புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும்:
நீங்கள் இருக்கும் துறையில் புதிதாக வந்திருக்கும் விஷயங்கள் என்ன, எது ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையான சந்திப்புகளில் கலந்து கொள்வது, வெப்மினாரில் கலந்து கொள்வது, வர்க் ஷாப்பில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.
புதிய திறன்களை கற்றுக்கொள்ள, ஆன்லைனில் படிக்கலாம். இதற்கென்று பல கோர்ஸ்கள் இருக்கின்றன.
நெட்வர்க்:
உங்களின் தொழில் நெட்வர்க்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கென நடக்கும் மீட்டிங்க், வேலை வாய்ப்பு முகாம்கள், சந்திப்புகள் ஆகியவற்றை கலந்துகொள்ள வேண்டும்.
நெட்வர்க் செய்வதற்கு என்று தனியாக சில தளங்கள் உள்ளன. LinkedIn போன்ற தளங்களில் பக்கங்களை உருவாக்கி, தொழிலில் சாதிப்பவர்களுடன் கனெக்ட் கொடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் சமூக வலைதள பக்கங்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறரால் உங்களையும், உங்களால் பிறரையும் ஈசியாக தொடர்புகொள்ள முடியும்.
மேலும் படிக்க | முழு நேர வேலை பார்ப்பவர்களும் முதலாளி ஆகலாம்! ‘இதை’ செய்யுங்கள் போதும்..
கற்றல்:
உங்களை பற்றி வரும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை உங்களின் மேல் அதிகாரி அல்லது உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் ஆகியவர்களிடம் கேட்கலாம்.
உங்களுக்கு ஏதேனும் விஷயங்கள் தெரியவில்லை என்றால், அதனை பிறரிடம் கேட்டு கற்றுக்கொள்ளலாம். இது உங்களுக்கு நல்ல வழிகாட்டலாகவும் ஆதரவாகவும் இருக்கும்.
சில நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு சில வர்க்-ஷாப்களை நடத்துகிறது. இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
மாற்றிக்கொள்ளும் திறன்:
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த மாற்றம் வரும் போது சிலருக்கு அதனை ஏற்றுக்கொள்ள மனம் வராது. எனவே, புது இடத்திற்கு, புதிய தொழில் நுட்பத்திற்கு, புதிய யோசனைகளுக்கு ஏற்றவாரு உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்கள் சூழ்நிலைகள் மாறும் போது நீங்களும் மாறுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் வேலையில் உங்களை சுற்றி என்ன நடந்தாலும், உங்கள் வேலையிலும் இலக்கிலும் மட்டும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | வேலை பார்க்கவே கடுப்பா இருக்கா... இந்த 5 பழக்கங்களை வச்சுக்கோங்க - பிரச்னை ஓவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ