Udaan Yatri Cafe at Airports: நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் உணவுகள் பானங்கள் கட்டணம் அதிக அளவில் இருப்பது, விமான பயணிகள் பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. விமான கட்டணங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், உணவு மற்றும் பானங்களுக்கும் அதிக கட்டணங்கள் இருப்பதால் பலர் செலவழிக்க யோசிக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது . எனினும், தற்போது பயணிகளின் இந்தப் பிரச்னைக்கு தீர்வு வரப் போகிறது. இப்போது, இந்த பிரச்சினையை உணர்ந்து கொண்ட அரசாங்கம் "உதான் யாத்ரி கஃபே" என்னும் மலிவு விலை உணவகங்களை விமான நிலையங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் "உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும். இந்த கஃபேயில் தண்ணீர் பாட்டில்கள், டீ, காபி, தின்பண்டங்கள் ஆகியவை நியாயமான விலையில் கிடைப்பதால், பயணிகளுக்கு மிகுந்த நிம்மதி கிடைக்கும். முதலில் கொல்கத்தா விமான நிலையத்தில் தொடங்கி வைக்கப்படும் உதான் யாத்ரி கஃபே, விரைவில் பிற விமான நிலையங்களிலும் கொண்டு வரப்படும். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் "உதான் யாத்ரி கஃபே" தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னோடி திட்டமான இது, பின்னர் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மற்ற விமான நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்கள் அவை எம்.பி., ராகவ் சதா, விமான நிலையங்களில் தண்ணீர், தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் விலைகள் மிக அதிக அளவில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதன் பிறகு விமான நிலையங்களில் மலிவான உணவு வசதிகளை வழங்குவதற்காக 'உதான் யாத்ரி கஃபே' தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!
ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும் கூறினார். பொது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசு, கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மலிவி விலை கஃபே தொடங்கிய நிலையில், விரைவில் நாட்டின் மற்ற விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மக்களுக்கு நியாயமான விலையில் வசதிகளை வழங்குவதன் மூலம், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நெரிசலான விமான நிலையங்களுக்கு மத்தியில் விமானப் பயணத்தை எளிமையாக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார். இதன், மூலம், மலிவான விலையில் தண்ணீர் அல்லது தேநீர், சிற்றுண்டி போன்ற அடிப்படைப் பொருட்களை பெறலாம். இவற்றுக்காக 100-250 ரூபாய் என அதிகமாக செலவு செய்யும் நிலை மாறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, "விமான நிலையங்களின் நிலை இப்போது பேருந்து நிலையங்களை விட மோசமாகிவிட்டது. நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல் மற்றும் ஒழுங்கற்ற நிர்வாகத்தால், விமான பயணிகள் பல வகையில் அவதிக்கு உள்ளாகின்றனர்" என்று ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கூறியிருந்தார்.
மேலும் படிக்க | புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ