உலக பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி!! 

Last Updated : Aug 5, 2018, 03:59 PM IST
உலக பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து! title=

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி!! 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தனது காலிறுதி போட்டோயில் ஜப்பானின் நோசொமி ஒக்குஹாராவை 21-17, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3 ஆம் இடத்தில் இருக்கும் பி.வி. சிந்து, 2 ஆம் இடத்தில இருக்கும் ஜப்பானின் அகானே யமகூச்சியை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் 2 ஆம் நிலை வீரரை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இதையடுத்து இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். 

Trending News