CWG 2018 -ல் தேசிய கொடி ஏந்தும் பெருமையை பெற்றார் சிந்து!

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடி ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Written by - Mukesh M | Last Updated : Mar 24, 2018, 07:35 PM IST
CWG 2018 -ல் தேசிய கொடி ஏந்தும் பெருமையை பெற்றார் சிந்து! title=

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடி ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். இதில் இந்தியாவின் சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிவி சிந்து பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News