உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி!!
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தேசிய கொடி ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் 'பேட்மேன் சவால்' அடுத்து இந்திய பெண்கள் மல்யுத்த அணியினர் சுகாதார பட்டைகள் (sanitary pads ) ஏந்தி புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்!
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து, எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், டென்மார்க்கின் ஹன்ஸ்-கிரிஸ்டியன் விட்டிங்கசை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.
கொரிய ஓபன் சீரிஸ் தொடரில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
கொரிய ஓபன் சீரிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து பெண்களுக்கான அரையிறு போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவை சேர்ந்த பிங் ஜியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பரபரப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தினில் பி.வி.சிந்து 21 -10, 21 -17, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார். இதனையடுத்து 2-1 என்ற கனக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினர், எனினும் இறுதி போட்டியில் அவர் ஜப்பான் வீராங்கனை நொசொமி ஒகுஹராவிடம் போராடி தோல்வி அடைந்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-21, 22-30, 20-22 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியுற்றார்.
உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.
நேற்று (வெள்ளி) நடைபெற்ற போட்டியில் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து ஆகியோரின் வெற்றி மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை உறுதியானது.
போட்டியின் விவரங்கள்:
அரை இறுதி 1: சாய்னா நேவால் vs நோஸ்மி ஒகஹாரா
அரை இறுதி 2: பி.வி. சிந்து vs யூபீய் சென்
முன்னதாக இன்று 1.14 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் கிரிஸ்டி கில்மோர்-வை 21-19, 18-21, 21-15 என்னும் செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.