3–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (PPL) போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சை எதிர்கொண்டது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை அணியின் பி.வி.சிந்து 15–11, 10–15, 15–12 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் வீராங்கனை தாய் ஜூ யிங்கை தோற்கடித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் தனோங்சாக் 15–10, 12–15, 15–14 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தினார். எனினும் மற்றொரு ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சென்னை அணி ஏமாற்றத்தை அளித்தது.
இதனையடுத்து வெற்றி வாகை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கலப்பு இரட்டையரில் பி.வி.சிந்து–பி.ஸ்.ரெட்டி இணை 15–14, 15–13 என்ற நேர் செட்டில் கமிலியா– லீ சுன் ஜோடியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது.
இறுதியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 2–1 என்ற புள்ளி கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தியது. வெற்றிவாகை சூடிய சென்னை அணி தனது கடைசி லீக்கில் பெங்களூரு பிளாஸ்டர்சுடன் நாளை மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!