இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியார், அர்சுனா, தயன் சந்த் மற்றும் ராஷ்டிரிய கே ப்ரோட்சாஹான் புரஸ்கர் ஆகிய 5 உயரிய விருதுகள் இந்தய அரசு சார்பில் வழங்கபட்டு வருகிறது. இதில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது உயரிய விருதாகும், இந்த விருதினை பெரும் வீரர்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பண முடிப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, பளுதூக்கும் வீரங்கனை மீராபாய் சானு இருவருக்கும் இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு விளையாட்டுத்துறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Cricketer Virat Kohli and weightlifter Mirabai Chanu have been recommended for Rajiv Gandhi Khel Ratna award: Khel Ratna, Arjuna Award committee sources pic.twitter.com/SSlDHjlY4I
— ANI (@ANI) September 17, 2018
உலக சாம்பியன்சிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ள பாளுத்தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருது பிரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, சானிய மிர்சா, சாய்னா நேவால், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தன்ராஜ் பிள்ளை, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், அபினவ் பிந்த்ரா ஆகியோர் கேல் ரத்னா விருது பெற்றுள்ளனர்.