CWG_2018: நிறைவு விழாவில் தேசியக்கொடி ஏந்தும் குத்துச்சண்டை வீராங்கனை!!

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடி ஏந்தி வழிநடத்த செல்கிறார்.  

Last Updated : Apr 15, 2018, 09:33 AM IST
CWG_2018: நிறைவு விழாவில் தேசியக்கொடி ஏந்தும் குத்துச்சண்டை வீராங்கனை!! title=

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடி ஏந்தி வழிநடத்த செல்கிறார்.

கடந்த ஏப்., 4ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் துவங்கியது. 11 நாட்கள் நடந்த இந்தவிளையாட்டின் நிறைவு விழா இன்று, துவக்கவிழா நடந்த கார்ரா மைதானத்தில் நடக்கிறது. 

இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கும். இந்த நிறைவு விழாவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை தேசியக்கொடி ஏந்தி வழிநடத்த செல்கிறார். 

இது வரையில் இந்தியா 26 தங்கம் 17 வெள்ளி, 19 வெண்கலப்பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

Trending News