தாய்லாந்து ஓபன்: இறுதிப் போட்டியில் பிவி சிந்து தோல்வி!

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைத்தார்!

Written by - Mukesh M | Last Updated : Jul 16, 2018, 12:56 PM IST
தாய்லாந்து ஓபன்: இறுதிப் போட்டியில் பிவி சிந்து தோல்வி! title=

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைத்தார்!

தாய்லாந்தில் நடைப்பெற்று வரம் ஓபன் பாட்மிண்டன் சாப்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவில் பி.வி சிந்து, ஜப்பானின் நோசோமி ஒக்குஹராவை எதிர் கொண்டார். பாங்காகின் நிமிபுட்டர் ஆடுகளத்தில் நடைப்பெற்று இப்போட்டியில் 15-21, 18-21 என்ற செட் கணக்கில் நோசோமி வெற்றி பெற்றார். 

இந்த தோல்வியின் மூலம், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை பி.வி. சிந்து நழுவவிட்டார். தாய்லாந்து ஓபன் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்தாண்டு நடைப்பெற்றுள்ள சாம்பியன் போட்டிகளில் மூன்றாவது முறையாக இறுதி போட்டியில் பி.வி சிந்து தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கோல்ட் கோஸ்ட் காம்ன்வெல்த் போட்டிகள், இந்தியா ஓபன் ஆகிய தொடர்களின் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து ஓபன் தொடரின் விருவிருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி முன்னேறினார். எனினும், இறுதி போட்டியில் யாரும் எதிர்பாரா விதமாக பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News