ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் அனுபவத்தின் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
LPG Gas Price: நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், பொது எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உர அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு பிரதிநிதி அரசு அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.
ஓஎன்ஜிசியின் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் மும்பை அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு பணியாளர்கள் விமானிகள் மற்றும் ஏழு பயணிகள் இருந்தனர்.
உலக சந்தைகளில் ஆக்கப்பூர்வமான சூழல், பொதுவான ஒரு நேர்மறை கண்ணோட்டம் ஆகியவற்றால் உள்நாட்டு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை இன்று உறுதியான ஏற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கான ஏற்றத்தைக் கண்டது.
கொச்சி கப்பல் துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் இச்சம்பவத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக, கதிராமங்கலத்தில் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
இந்த களத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், கதிராமங்கலம் வந்து நேரடியாகத் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கதிராமங்கலம் வந்துள்ளார். நேரடியாக போராட்டக் களத்துக்கு வந்துள்ள அவர், அங்கு போராடும் மக்களிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கதிராமங்கலம் வந்தார்.
அப்போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய அவர்:-
கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.