ONGC Recruitment: மகாராஷ்டிர மாநிலத்தில் 64 காலியிடங்களை நிரப்புகிறது ஓஎன்ஜிசி! தகுதி மற்றும் விவரங்கள்

ONGC Recruitment 2022: ஓஎன்ஜிசி, 64 காலியிடங்களுக்கு (பட்டதாரி பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அல்லாதவர்கள், மருத்துவ அலுவலர், உதவி தொழில்நுட்ப வல்லுநர், துணை மருத்துவர்கள், செவிலியர், ஜூனியர் அசிஸ்டென்ட், அப்ரண்டிஸ்) ஆட்களை நியமிக்கவிருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2022, 11:09 AM IST
  • 64 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
  • ஓஎன்ஜிசி வேலைவாய்ப்பு 2022
  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
ONGC Recruitment: மகாராஷ்டிர மாநிலத்தில் 64 காலியிடங்களை நிரப்புகிறது ஓஎன்ஜிசி! தகுதி மற்றும் விவரங்கள் title=

ONGC Recruitment 2022: ஓஎன்ஜிசி, 64 காலியிடங்களுக்கு (பட்டதாரி பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அல்லாதவர்கள், மருத்துவ அலுவலர், உதவி தொழில்நுட்ப வல்லுநர், துணை மருத்துவர்கள், செவிலியர், ஜூனியர் அசிஸ்டென்ட், அப்ரண்டிஸ்) ஆட்களை நியமிக்கவிருக்கிறது. ONGC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ongcindia.com இந்த காலியிடங்களை பூர்த்தி செய்வதற்காக சமீபத்தில் அறிவித்துள்ளது.  

ONGCயின் மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கர், உரானில் அமைந்துள்ள தொழிற்சாலையில் பணி புரிவதற்கான வாய்ப்பு வேண்டுமா? மொத்தம் 64 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்களை ஓஎன்ஜிசி வரவேற்கிறது. இன்று, அதாவது நவம்பர் 23 முதல், அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 5ம் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்  (ONGC) நிறுவனத்தில், மொத்தம் 13 பணிகளுக்காக 64 காலியிடங்கள் உள்ளன. ஒரு பணிக்கு விண்ணப்பிப்பவர் மற்றுமொரு வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடாது. அதாவது, இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள 13 பணி வகைகளில் ஒருவர் ஒரு பணிக்காக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க | இந்திய வான்படையில் அக்னிபாத் வீரராக வாய்ப்பு! விண்ணப்பிக்க இறுதி நாள் 24

1) நிறுவனம் :

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC)

2) பணிகள் :

பட்டதாரி பயிற்சியாளர்கள்

மருத்துவ அலுவலர்

உதவி தொழில்நுட்ப வல்லுநர்

துணை மருத்துவர்கள்

செவிலியர்

ஜூனியர் அசிஸ்டென்ட்,

மேலும் படிக்க | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?

3) தேர்வு செய்யப்படும் முறை :

கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணல் போன்றவற்றின் மூலம் தகுதியான நபர்கள் மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

4) விண்ணப்பிக்கும் செயல்முறை :

www.ongcindia.com என்ற இணையாதளத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

5) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

டிசம்பர் 5, 2022.

இந்தப் பணிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள், அப்ரண்டிஸ்களாக, அதாவது பயிற்சி பெறும் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிப் பணியாளர்களாக சேர்க்கப்படுபவர்கள், பணியாளர்களாக நிரந்தரப்படுத்தப்படுவார்கள்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News