ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 14 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 27, 2022, 01:09 PM IST
  • ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
  • மொத்தம் 14 காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • அக்டோபர் 3ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
 ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது Assistant Legal Advisor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Legal Advisor பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Legal Advisor கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ONGC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Legal Advisor ஊதிய விவரம்:

பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONGC விண்ணப்பக்கட்டணம்:

GEN/OBC/EWS – ரூ.300

மற்றவர்கள் – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் CLAT தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | கைவினை கலைஞர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://recruitment.ongc.co.in/ என்ற தளத்தில்விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி விதியில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News