நாடு முழுவதும் தற்போது 15 வருட பழைய வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கை அமலில் உள்ளது. இதை தீவிரமாக கடைபிடிக்கவில்லை என்றாலும், 15 வருட பழைய வாகனங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ் கிடைக்காது. இந்த நிலையில், மாசுபாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை சுத்தமாக பராமரித்து மேம்படுத்தவும் அரசு, ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது, பழைய வாகன அப்புறப்படுத்தும் Vehicle Scrapping Policy என்னும் கொள்கையின் கீழ், பழைய, மாசுபடுத்தும் வாகனங்களை அகற்றுவதன் மூலம் புதிய வாகனம் வாங்குவதற்கு 50% வரை வரிச் சலுகை பெறலாம்.
தனியார் மற்றும் வணிக வாகன உரிமையாளர்கள் இருவரும் இந்த தள்ளுபடி மூலம் பயனடைவார்கள். உங்களிடம் பழைய கார்கள் இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும், இதன் மூலம் உங்கள் பழைய காரை அகற்றுவது மட்டுமின்றி, மலிவான விலையில் புதிய காரையும் வாங்கலாம்.
வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய நோக்கம் மாசுபாட்டைக் குறைத்து, நாட்டில் ஆரோக்கியமான சூழலைப் பேணுவதாகும். பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை அகற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும் என்று அமைச்சகம் நம்புகிறது. வாகனங்களை அப்புறப்படுத்திய பின், தள்ளுபடி வழங்கப்படும் முறை, எந்தெந்த வாகனங்கள் இந்தத் சாலை வரி விலக்கு திட்டத்தில் சேர்க்கப்படும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அதிக மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்ற போக்குவரத்து அமைச்சகம் புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. இதன்படி, புதிய வாகனங்கள் வாங்குவதற்கான ஒரு முறை வரி விலக்கு இரட்டிப்பாக, அதாவது 50% ஆக உயர்த்தப்படும்.
தற்போது, பழைய தனியார் வாகனங்களை அகற்றினால், புதிய வாகனம் வாங்குவதற்கு 25% தள்ளுபடியும், வணிக வாகனங்களுக்கு 15% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இப்போது இந்த விதிவிலக்கு (BS-1) தரத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். BS-1 தரநிலை என்பது 2000 ம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள்.
பிஎஸ்-2 வாகனங்களுக்கு பொருந்தும் திட்டம்
BS-2 தர நிலை, அதாவது 2002ல் நடைமுறைக்கு வந்த மாசு உமிழ்வு தரநிலை வாகனங்களுக்கும் 50% வரை தள்ளுபடி பொருந்தும். தனியார் மற்றும் வணிக வாகனங்கள் இரண்டும் இந்த தள்ளுபடியின் பலனைப் பெறும். உங்கள் கார் (டீசல்) 10 ஆண்டுகள் அல்லது கார் (பெட்ரோல்) 15 ஆண்டுகள் பழமையானது என்றால், நீங்கள் ஸ்கிராப் பாலிசியின் பலனைப் பெறலாம்.
வாகன ஸ்கிராப் கொள்கை என்றால் என்ன?
மாசுபடுத்தும் வாகனங்களை அகற்ற போக்குவரத்து அமைச்சகம் புதிய கொள்கையை தொடங்கியுள்ளது, இது 'Vehicle Scrapping Policy' அல்லது 'Voluntary Vehicle Modernization Program' என அழைக்கப்படுகிறது. இந்தக் கொள்கையின் நோக்கம் பழைய மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்றி புதிய, குறைந்த மாசுபடுத்தும் வாகனங்களை வாங்க ஊக்குவிப்பதாகும். இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள பழைய வாகனங்களை அகற்றும் அமைப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தானியங்கி சோதனை நிலையங்களின் நெட்வொர்க் தயாராக உள்ளது
இந்தக் கொள்கையின் கீழ், பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப் வசதிகள் (RVSF) மற்றும் தானியங்கு சோதனை நிலையங்கள் (ATS) நாடு முழுவதும் உருவாக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க் மூலம், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் படிப்படியாக அகற்றப்படும். தற்போது, நாட்டில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60க்கும் மேற்பட்ட (RVSF) உள்ளன. (RVSF) மற்றும் (ATS) என்பது ஸ்கிராப்பேஜ் வசதிகள் மற்றும் வாகனங்கள் சரிபார்க்கப்படும் சோதனை நிலையங்களைக் குறிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ