Budget 2025: புதிய வரி முறையில் வரி விலக்குகள்... நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025ம் ஆண்டுக்காண பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி செலுத்துவோருக்கு பலன் அளிக்கும் வகையில், வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2025, 10:42 AM IST
  • பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.
  • வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
  • புதிய வரி முறையில் மாற்றம் ஏற்படுமா?
Budget 2025: புதிய வரி முறையில் வரி விலக்குகள்... நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? title=

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025ம் ஆண்டுக்காண பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி செலுத்துவோருக்கு பலன் அளிக்கும் வகையில், வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளிக்கும் அறிவிப்புகள்

அதிக பணவீக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களைக் குறைக்கவும், விலக்கு வரம்பை அதிகரிக்கவும் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் முக்கிய அறிப்புகள் வெளியாகலாம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

புதிய வரி முறையில் விலக்குகள்

வருமான வரி உள்கட்டமைப்பை எளிதாக்கும் நோக்கில்க், 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட  பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதில் வருமான வரி விலக்கு எதுவும் இல்லை. இந்நிலையில், புதிய வரி முறையில் அதிக அளவில் மக்கள் ஏற்பதை ஊக்குவிக்கும் வகையில், சில விலக்குகளை அரசு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. 2025 பட்ஜெட்டில் புதிய வரி முறையில், கீழ் HRA, பிரிவு 80C வரி விலக்கு மற்றும் 1 லட்ச ரூபாய்க்கு ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், அதாவது நிலையான விலக்கு ஆகியவற்றை வழங்க வேண்டும் நிபுணர்கள் கோருகின்றனர்.

HRA கொடுப்பனவிற்கு விலக்கு

புதிய வரி முறையில் சம்பளத்தில் கிடைக்கும் HRA கொடுப்பனவிற்கு விலக்கு சேர்க்கப்பட வேண்டும் என்பது வரி செலுத்துவோரின் பொதுவான கோரிக்கையாகும். தற்போது இந்த வரி விலக்கு பழைய வரி முறையின் கீழ் மட்டுமே கிடைக்கிறது. வரி சேமிப்புக்கு வழிவகுக்கும், இந்த விலக்கை சேர்ப்பது, வருமான வரி செலுத்துவோருக்கு, குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | வீட்டில் முதியவர்கள் இருந்தால்... இந்த FD திட்டத்தை உடனே போடுங்க - அதிக வட்டி கிடைக்கும்!

நிலையான விலக்கு வரம்பு

புதிய வரிமுறையில் நிலையான விலக்கு மட்டுமே கிடைக்கும். பழைய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்குடன் நிலையான விலக்கின் பலனும் கிடைக்கிறது. தற்போது புதிய வரி முறையில் ரூ.75 ஆயிரமாக உள்ள நிலையான விலக்கு தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பழைய வரி முறையில் நிலையான விலக்கு ரூ.50 ஆயிரமாக உள்ள நிலையில், அதனை ரூ.1 லட்சமாக உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பிரிவு 80C வரம்பு

பழைய வரி முறையில், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ், வரி செலுத்துவோருக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக மாறாத இதன் வரம்பில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதனை ரூ. 2 லட்சமாக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது முதலீட்டாளர்கள் PPF, LIC, PF மற்றும் வீட்டுக் கடன் போன்ற இடங்களில் முதலீடு செய்வதன் மூலம்  வரி விலக்கு கோரலாம்.

வீட்டுக் கடன் வட்டிக்கான விலக்கு

பழைய வரி முறையில், தனிநபர்கள் பிரிவு 80EE இன் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகைக்கான விலக்கு ஒரு நிதியாண்டில் ரூ.50,000 வரை இருக்கும். இதையும் பட்ஜெட்டில் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதையும் புதிய வரி முறையில் மாற்றம் ஏற்படுமா என்பதையும் அறிய பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியாவின் 62% பணக்காரர்கள்... இதில் தான் முதலீடு செய்ய திட்டமிடுகின்றனர்.. அறிக்கையில் வெளியான தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News