Cyclone Tauktae: புயலின் சேதங்களை பார்வையிட குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

‘டவ் தே’ புயலால் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 19, 2021, 09:44 AM IST
  • புயலின் சேதங்களை பார்வையிட குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
  • மாநிலத்தில் புயல் மற்றும் வெள்ளத்துக்கு 7 பேர் பலி
  • நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம்
Cyclone Tauktae: புயலின் சேதங்களை பார்வையிட குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி   title=

அகமதாபாத்: குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த ‘டவ் தே’  புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மாநிலத்தில் புயல் மற்றும் வெள்ளத்துக்கு 7 பேர் பலியாகி உள்ளதாகவும், நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புயல் கரையை கடந்தபோது பல மரங்களை வேரோடு சாய்த்துச் சென்றது. அதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, ராணுவத்தினர் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர்.  

Also Read | Cyclone Tauktae கரையைக் கடக்கத் தொடங்கியது; எச்சரிக்கையில் குஜராத் 14 பேர் பலி 

வெள்ளம் இன்னமும் வடியாத நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தை சேர்ந்த பிரதமர் நரேந்தி்ர  மோடி, புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, இன்று குஜராத் செல்கிறார். டெல்லியில் இருந்து, காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் செல்லும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிடுகிறார். 

Also Read | Oxygen production: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

அதோடு, உனா, டையூ, ஜபராபாத், மஹூவா பகுதிகளையும் பிரதமர் பார்வையிடுவார்.  
இதனிடையே, டவ் தே புயல் மும்பையை கடந்தபோது, எண்ணெய் ரிக் மற்றும் ஓ.என்.ஜி.சியின் நான்கு கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல் ஒன்றும் டவ் தே சூறாவளியின் பிடியில் சிக்கின.

கடலோர காவல்படை (Coast Guard) மற்றும் கடற்படை கரையோர பகுதிகளில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, திங்கள்கிழமை டக்டே சூறாவளியின் போது அரேபிய கடலில் காற்று வீசிய சூறாவளிக் காற்று மற்றும் உயரமான அலைகள் வீசின.

அவற்றில் சிக்கித் தவித்த 637 பேர் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர், காணாமல் போன குறைந்தது 80 பேரை தேடும் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read | Earthquake: நேபாளத்தில் போகாராவின் கிழக்கே 5.3 அளவிலான நிலநடுக்கம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News