சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சொந்தங்கள் சந்திப்பு கூட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க |ஜனவரி 31.. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
அன்புமணி ராமதாஸ் பேச்சு
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, வன்னிய மக்களுக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு பாட்டாளி மக்கள் கட்சி என்றும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அயராது உழைத்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான இட ஒதுக்கீட்டினை பெற போராடி முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் ஆட்சியாளர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வன்னிய மக்களை புறக்கணிப்பதிலேயே குறியாக இருப்பதாக தெரிவித்தார். டாக்டர் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பாமக சார்பில் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்குவதாக அறிவித்து அதை முறையாக வரைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற வரை சென்றதாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றமே இந்த வழக்கை கையாண்டு நன்கு ஆய்வு செய்த பிறகு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகும், தற்போதைய தமிழக அரசு அதை செயல்படுத்த மறுப்பதாகவும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த வகையிலும் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிகமாக துரோகம் இழைத்தவர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் என்று குற்றம் சாட்டிய அவர், இதனை வன்னிய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கண்டிப்பாக தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
டாக்டர் ராமதாஸ் பேச்சு
அதனை தொடர்ந்து பேசிய பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், வன்னிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததோடு அவர்களை நல்வழிப்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி என்றும் அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வருவதாக தெரிவித்தார். தம்மை படைத்த இறைவன் நேரில் வந்து உனக்கு என்ன வரம் என்று கேட்டால் மூன்று வரத்தை கேட்பேன் என்றும், அதில் ஒன்று ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாகாமல் கடலில் கலக்க விடக்கூடாது அதை சேமிக்க வேண்டும் என்றும், குடிபோதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இறைவனிடம் அந்த வரத்தை எனக்கு தாருங்கள் என கேட்பதாக தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் பெண்களின் கையில் தான் பெரிய மிகப் பெரிய சக்தி உள்ளது. அந்த சக்தியை அனைவரும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். காசு கொடுத்தால் வாங்கிக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்து உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டத்தில் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸும் மாநிலத் தலைவர் டாக்டர் அன்புமணியும் ஒருவருக்கு ஒருவர் அருகிலேயே அமைந்திருந்தாலும் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் முகத்தை இறுக்கத்தோடு வைத்தபடி அமர்ந்திருந்தது கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசிய நகைச்சுவை பேச்சு மற்றும் ராமதாஸ் அவ்வப்போது நகைச்சுவை கலந்த பேச்சின் போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நிர்வாகிகள் கைதட்டி ஆர்வாரம் செய்த போதும் கூட டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருக்கத்துடனே முகத்தை வைத்திருந்தது அனைவரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. ஏதோ கடமைக்காக இருவரும் வந்தது போல ஒருவரை ஒருவர் அருகில் அமைந்திருந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளாதது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
மேலும் படிக்க | சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ