இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம்! 300 புள்ளிகள் ஏறிய Sensex!!

உலக சந்தைகளில் ஆக்கப்பூர்வமான சூழல், பொதுவான ஒரு நேர்மறை கண்ணோட்டம் ஆகியவற்றால் உள்நாட்டு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை இன்று உறுதியான ஏற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கான ஏற்றத்தைக் கண்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2020, 11:51 AM IST
  • மும்பை பங்குச் சந்தை இன்று உறுதியான ஏற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கான ஏற்றத்தைக் கண்டது.
  • தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 76.50 புள்ளிகள் அதாவது, 0.73% அதிகரித்து 10,506.55 என்ற அளவுகளில் இருந்தது.
  • சென்செக்சில் ONGC மிக அதிக அளவிலான ஏற்றத்தைக் கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம்! 300 புள்ளிகள் ஏறிய Sensex!! title=

மும்பை பங்குச் சந்தை (Sensex) இன்று உறுதியான ஏற்றத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கான ஏற்றத்தைக் கண்டது. உலக சந்தைகளில் இருந்த சாதகமான சூழலும் இந்த ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கோவிட்-19-க்கான (Covid-19) தடுப்பு மருந்துகள் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்களின் கண்ணோட்டத்தை திடப்படுத்தியுள்ளது.

35,724.32 என்ற உச்சத்தைத்தொட்ட பின்னர், சென்செக்ஸ் நேற்றைய நிலையை விட 249 புள்ளிகள் அதிகரித்து 35,663 என்ற அளவில் இருந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி (Nifty) 76.50 புள்ளிகள் அதாவது, 0.73 சதவிகிதம் அதிகரித்து 10,506.55 என்ற அளவுகளில் இருந்தது.

சென்செக்சில் ONGC மிக அதிக அளவிலான அதிகரிப்பைக் கண்டது. இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4% அதிகரித்தன. இதைத் தொடர்ந்து, M&M,  இண்டஸிண்ட் வங்கி, HDFC வங்கி, SBI, டைடன் ஆகிய நிறுவனங்களும் ஏற்றத்தைக் கண்டன. மறுபுறம், டெக் மஹிந்திரா, HUL  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.

புதனன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை மொத்தமாக விற்றதைக் காண முடிந்தது.

உலக சந்தைகளில் ஆக்கப்பூர்வமான சூழல் காணப்பட்டதும், பொதுவாக ஒரு நேர்மறை கண்ணோட்டம் காணப்படுவதும் உள்நாட்டு சந்தைகளின் ஏற்றத்திற்குக் காரணம் என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். மேலும், ஜெர்மனியின் BioNTech மற்றும் அமெரிக்க மருத்துவ நிறுவனமான Pfizer இணைந்து உருவாக்கிவரும் கொரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் சாதகமாக வந்துகொண்டிருப்பதும், பொதுவாக உலகளவில் சந்தைகளில் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

ஷாங்காய், ஹாங்ஹாங், டோக்கியோ மற்றும் சியோலிலும் பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வைக் கண்டன. வால் ஸ்ட்ரீட் (Wall street) பங்குச் சந்தையும் அதிகரித்த நிலையிலேயே முடிந்தது.

சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெயின் ஃப்யூச்சரும் 0.12% அதிகரித்து பேரலுக்கு 42.08 டாலர் ஆனது.

ALSO READ: 805 கோடி ரூபாய் மோசடி! சிபிஐ வலையில் சிக்கிய ஜிவிகெ குழுமம்!!

Trending News