கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகளாக கருதப்படும் இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே ஓமிக்ரானின் அறிகுறிகள் அல்ல. சமீபத்திய தகவல்களின் படி, வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளிடம் காணப்படுகின்றன. ஓமிக்ரான் மாறுபாட்டால் தாக்கப்பட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆம், உங்களுக்கு வயிற்றில் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீங்கள் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Omicron Food: ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு பல வித அறிகுறிகள் தென்படுகின்றன. இவற்றில் பசியின்மையும் ஒரு அறிகுறியாகும். மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்த குழப்பத்தில் இருக்கின்றனர். ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால், தொண்டையில் கடுமையான வலி மற்றும் தொண்டையில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. எதை குடித்தாலும், தொண்டையில் வலி இருக்கும். இந்த நிலையில், எந்தெந்த உணவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். தொண்டையில் வலி இருந்தாலும், இந்த உணவுகளால் உங்களுக்கு பிரச்சனை இருக்காது.
Omicron Symptoms: மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் டெல்டா மாறுபாட்டுக்கு ஈடாக ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஓமிக்ரானின் அறிகுறிகள் லேசானவையாக உள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் மக்கள் இது குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகளும் பொதுவான காய்ச்சலின் அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. மிகக்குறைந்த வேறுபாடுகள் காரணமாக ஓமிக்ரான் தொற்றை கண்டறிவது கடினமாக உள்ளது.
ஓமிக்ரான் காரணமாக, பலர் பல கடுமையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். முந்தைய வகைகளில் காணப்படாத சில அறிகுறிகள் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகின்றன.
ஓமிக்ரான் நோயின் முக்கிய பின்விளைவு ஒன்றைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவகளின் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகின்றது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரானின் சில அறிகுறிகள் டெல்டாவிலிருந்து வேறுபட்டவை. எனினும் சிலர் சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளாவில் 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில் 204, தமிழ்நாட்டில் 121 என ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.