இந்தியாவில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்ட இருவர் உயிர் இழப்பு: காரணம் தொற்றா?

ராஜஸ்தானின் உதய்பூரில் கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்ட 73 வயது முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 04:23 PM IST
இந்தியாவில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்ட இருவர் உயிர் இழப்பு: காரணம் தொற்றா?  title=

புதுடெல்லி: உலக மக்களை பாடாய் படுத்திய கொரோனா வைரசின் இரண்டாவது அலை சற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கிய நிலையில், ஓமிக்ரான் மாறுபாடு மக்களின் முன் புதிய சவாலாய் முளைத்துள்ளது. 

ராஜஸ்தானின் உதய்பூரில் கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்ட 73 வயது முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவையும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த நபருக்கு டிசம்பர் 21 அன்று கோவிட்-19 சோதனை செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், 4 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 25 அன்று, அவருக்கு வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டது. 

கோவிட்டுக்கு பிறகான நிமோனியாவின் விளைவால் அந்த நபர் இறந்திருக்கலாம் என மருத்துவமனை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக வியாழக்கிழமை, மகாராஷ்டிராவின் பிம்ப்ரி மாவட்டத்தில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த 52 வயது நபர் மாரடைப்பால் இறந்தார். இருப்பினும், அரசு, அவரது மறைவுக்கு அவரது அடிப்படை மருத்துவ நிலைமைதான் காரணம் என்று கூறியது. இது ஓமிக்ரான் மாறுபாட்டினால் ஏற்பட்ட இறப்பாக அறிவிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்தது. 

அறிக்கைகளின்படி, இறந்தவர் ஒரு நீண்டகால நீரிழிவு நோயாளி ஆவார். அவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து வந்தவர். வியாழனன்று, பிம்ப்ரி சின்ச்வாடில் (புனே) உள்ள ஒய்.பி. சவான் மருத்துவமனையில், மாரடைப்பால் அவர் காலமானார். செவ்வாயன்று அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ALSO READ | திடீரென உயரும் COVID-19 பாதிப்பு: கவலை அளிக்கும் ஓமிக்ரான் எண்ணிக்கை!!

இதற்கிடையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டால் ஒரே நாளில் 309 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒமிக்ரானால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், நேற்று கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,764 ஆக இருந்தது, 220 பேர் இறந்தனர். 

அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 1,270 நோயாளிகளில், 374 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ள 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 450, டெல்லியில் 320, கேரளாவில் 109 மற்றும் குஜராதில் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

64 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா வைரஸ் எண்ணிக்கை 16,000 ஐத் தாண்டியது. இது நாட்டின் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கையை 3,48,38,804 ஆக உயர்த்தியது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 91,361 ஆக உயர்ந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன .

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் ஒமிக்ரான் பாதிப்பு விவரம்:
மகாராஷ்டிரா - 450
டெல்லி - 320
குஜராத் - 97
ராஜஸ்தான் - 69
தெலுங்கானா - 67
கேரளா - 109
தமிழ்நாடு - 46
ஹரியானா - 14
கர்நாடகா - 34
ஆந்திரப் பிரதேசம் - 16
ஒடிசா - 14
வங்காளம் - 11
மத்திய பிரதேசம் -9
உத்தரகாண்ட் - 4
சண்டிகர் - 3
ஜம்மு காஷ்மீர் - 3
உத்தரபிரதேசம் - 2
கோவா 1
ஹிமாச்சல் 1
லடாக் - 1
மணிப்பூர் 1
பஞ்சாப் - 1
பீகார் - 1

ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News