கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (Omicron Patients) அதன் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓமிக்ரானின் இந்த அறிகுறிகளை ப்ரைன் ஃபாக் (Brain Fog) வடிவத்தில் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
Brain Fog நினைவாற்றலைப் பாதிக்கிறது
டெய்லி மெயிலில் வெளியான அறிக்கையின்படி, Brain Fog நமது நினைவாற்றலை பாதிக்கிறது. இந்த ஆய்வை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். லாங்க் கோவிட் நோயின் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், Brain Fog பிரச்சனை மக்களிடம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Brain Fog ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த சில நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை கூட ஏற்படலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விஷயம் ஆய்வில் தெரிய வந்தது
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கொரோனா நோயாளிகள் (Corna Patiens) பரிசோதனையின் போது அத்தகைய அறிகுறிகளை உணரவில்லை. ஆனால் அவர்களின் நினைவாற்றல் வீழ்ச்சியைக் காட்டியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி, இந்த அறிகுறிகள் பல மாதங்களுக்கு நீடிக்கும்.
ALSO READ | அலட்சியப்படுத்த வேண்டாம், குழந்தைகளுக்கான ஒமிக்கிரான் அறிகுறிகள் இதுதான்
Brain Fog: அறிகுறிகள் என்ன?
ஓமிக்ரான் (Omicron Variant) நினைவகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, Brain Fog-ன் தாக்கத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் சுமார் 6 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும். நீண்ட நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தசை வலி, சீரற்ற இதயத்துடிப்பு, இருமல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். மறுபுறம், Brain Fog-யின் தாக்கம் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை, வேலை செய்ய இயலாமை மற்றும் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படலாம்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில், 26 வயதுடைய 136 பேர் ஆய்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 53 பேர் தங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்ததாகவும், லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். இவர்களின் நினைவாற்றல் மற்றும் கவனம் தொடர்பான பல சோதனைகள் செய்யப்பட்டன. இதில் அவர்கள் அனைவரது எபிசோடிக் மெமரி (Episodic Memory) மோசமாக இருப்பது தெரிய வந்தது. இவர்களால் தங்கள் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.
ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR