இந்த அறிகுறி ஒமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம்: இந்த உணவுகள் உதவும்

கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகளாக கருதப்படும் இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே ஓமிக்ரானின் அறிகுறிகள் அல்ல. சமீபத்திய தகவல்களின் படி, வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளிடம் காணப்படுகின்றன. ஓமிக்ரான் மாறுபாட்டால் தாக்கப்பட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆம், உங்களுக்கு வயிற்றில் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீங்கள் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

1 /4

தொற்றுக்கான அபாயம் இருந்து, உங்களுக்கு வயிற்றுப்போக்கும் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

2 /4

உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ஆகையால் இந்த சமயத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக திரவங்களை குடிக்க வேண்டும். முக்கியமாக, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் உடலில் நீர் (Water) பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.

3 /4

வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டால், நீங்கள் வறுத்த சீரகத்தையும் உட்கொள்ளலாம். இதனுடன் வேண்டுமானால் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம். அல்லது வெட்டிய பழங்களின் மேல் இட்டும் இதை உட்கொள்ளலாம். 

4 /4

வயிற்றுப்போக்கைச் சமாளிப்பதில் உலர் இஞ்சி (Dry Ginger) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே 3 கிராம் உலர் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரையை சம அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு பிரச்சனை நீங்கும்.