ஜெயலலிதா-வுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் படுகிறது: அப்பல்லோ தகவல்

Last Updated : Oct 4, 2016, 06:48 PM IST
ஜெயலலிதா-வுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் படுகிறது: அப்பல்லோ தகவல் title=

அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டிள்ளது. அதில் ஜெயலலிதா-வுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அவ்வப்போது ஜெயலலிதா-வுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என அப்பல்லோ வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அவரின் உடலுக்கு தேவையான சுவாசத்தை வென்டிலேட்டர் மூலம் தேவைப்படும்போது மட்டும் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு என்ன பிரச்சனை என தெளிவான பதில் இல்லாமல் குழப்பத்தில் தமிழக மக்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதன் முதலாக முதல்வருக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், லண்டன் மருத்துவர் ரிச்சார்டின் ஆலோசனைப்படி சிகிச்சைகள் நடந்து வருவதாக அதில் கூறப்பட்டது.

 

 

Trending News