பண்ருட்டி ராமச்சந்திரன்- ஜெ., விரைவில் வீடு திரும்புவார்

முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். முதல் அமைச்சர் ஜெயலலிதா நலமுடன் நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து பூரண நலத்துடன் வீட்டுக்கு திரும்புவார் என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Last Updated : Nov 3, 2016, 08:33 AM IST
பண்ருட்டி ராமச்சந்திரன்- ஜெ., விரைவில் வீடு திரும்புவார் title=

சென்னை: முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். முதல் அமைச்சர் ஜெயலலிதா நலமுடன் நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து பூரண நலத்துடன் வீட்டுக்கு திரும்புவார் என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

 மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஒருமாத காலத்தை தாண்டியுள்ள நிலையில், ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார் மற்றும் விரைவிலேயே வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலி தாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின்  நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா எம்பி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மனித நேயமக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பலர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

Trending News