ஜெயலலிதா பூரண நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் சில பேர் பரவி வருகின்றன.
முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த தவறான செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#AMMA pic.twitter.com/L0xFiKgDTm
— AIADMK (@AIADMKOfficial) September 26, 2016