India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர் வரும் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் முதலிடம் பிடித்துள்ளார். கேப்டனாக இருந்து 52 போட்டிகளில் 42 வெற்றியை பதிவு செய்துள்ளார். இதற்க்கு அடுத்த இடத்தில் தோனி 72 போட்டிகளில் 41 வெற்றியை பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியிலிருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது, "சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம்.
தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
காபுலில் மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.