Taliban Vs Terrorism: காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 2021 இல் 183 பேரைக் கொன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியிலிருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலீபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கினார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணித்து தவறுதலாக கீழே விழுந்து உயிர் இழந்த இரண்டு பேரில் ஒருவர் ஆப்கானை சேர்ந்த கால்பந்து வீரர் ஜக்கி அன்பர் என்பது தெரியவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.