IND vs AFG: இந்த வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!

India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர் வரும் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  

Written by - RK Spark | Last Updated : Jan 7, 2024, 02:15 PM IST
  • ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி.
  • இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு.
  • ரோஹித் டி20 போட்டியில் கேப்டனாக வாய்ப்பு.
IND vs AFG: இந்த வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி! title=

India vs Afghanistan: ஜனவரி 11 ஆம் தேதி மொஹாலியில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த முதல் இருதரப்பு டி20 தொடர், ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை 2024க்கு முன் இந்தியா விளையாடும் கடைசி வெள்ளைப் பந்து போட்டியாக இருக்கும். இந்த டி20ஐ தொடருக்கான இந்திய அணியை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வீரர்கள் பட்டியலை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.  காயங்கள் காரணமாக பல முக்கிய வீரர்களின் பெயர்கள் தேர்வுக்கு இடம்பெறவில்லை. அதேசமயம் பல சிறந்த வீரர்களின் தேர்வு குறித்து கேள்விக்குறிகள் உள்ளன. அதிகார்வப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம். 

மேலும் படிக்க | IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு?

விராட் கோலி: பேட்டிங் சூப்பர் ஸ்டார் விராட் கோஹ்லி நவம்பர் 10, 2022 முதல் இந்தியாவுக்காக டி20ஐ போட்டியில் விளையாடவில்லை. தற்போது வெளியான அறிக்கைகளின்படி, டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக கோலி பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆப்கானிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஷுப்மான் கில், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  

கேஎல் ராகுல்: ரிஷப் பந்த் இல்லாத நிலையில் கேஎல் ராகுல் இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக உள்ளார். ஆனால் இஷான் கிஷன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இதுவரை கிடைத்த குறைந்த எண்ணிக்கையிலான வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படுவதால், ராகுலுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. 

சூர்யகுமார் யாதவ்: டிசம்பர் 14, 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20யின் போது ஏற்பட்ட காயம் காரணமாக உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் சூர்யகுமார் யாதவ் பிப்ரவரி வரை ஓய்வில் உள்ளார். ஆல்-ரவுண்டர் ஹர்திக்குடன் இவரும் அணியில் இடம் பெற போவது இல்லை.  ஹர்திக் பாண்டியா அக்டோபர் 19, 2023க்குப் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட்: டிசம்பர் 21, 2023 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் விரலில் காயம் அடைந்தார், இதன் காரணமாக அவர் டெஸ்ட் தொடரைத் தவறவிட்டார். ஆப்கானிஸ்தான் டி20 போட்டிக்கு ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வரவிருப்பதால், ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்ற இரண்டு தொடக்க பேட்டர்களாக இருப்பதால், கெய்க்வாட் இந்திய அணியில் அவரது இடத்தை இழக்க நேரிடும்.

யுஸ்வேந்திர சாஹல்: டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யுஸ்வேந்திர சாஹல், ஆனால் கடந்த சில மாதங்களில் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒயிட்-பால் வடிவத்தில் முதல்-தேர்வு சுழற்பந்து வீச்சாளர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். அதனால்தான் சாஹல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  குல்தீப் மற்றும் பிஷ்னோய் தவிர, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற மூன்று உலகத் தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களை இந்தியா கொண்டுள்ளது, இது சாஹலுக்கு விஷயங்களை இன்னும் கடினமாக்குகிறது.

மேலும் படிக்க | ஓய்வுபெற்றார் புஷ்பா வார்னர்... அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News