லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா! அரையிறுதி சென்றது நியூசிலாந்து!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2021, 07:00 PM IST
  • நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான போட்டி இன்று நடைபெற்றது.
  • மிகவும் எளிய இலக்கை எதிர்த்து ஆடிய நியூஸிலாந்து அணி இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா! அரையிறுதி சென்றது நியூசிலாந்து!  title=

உலக கோப்பை 2021 போட்டியில் இந்திய அணி லீக் சுற்றுடன் இந்தத் தொடரை விட்டு வெளியேறுகிறது.  குரூப் Bயில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது.  இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தாள் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருந்தது.  இதன் காரணமாக இந்திய ரசிகர்களும் இந்த போட்டியை ஆவலுடன் பார்த்து வந்தனர்.  டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.  நஜிபுல்லா மட்டும் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 73 ரன்கள் அடித்தார்.  மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன்கள் அடிக்க தவறியதால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

 

மிகவும் எளிய இலக்கை எதிர்த்து ஆடிய நியூஸிலாந்து அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்து இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி மட்டும் உலககோப்பை விட்டு வெளியேறாமல் இந்திய அணியையும் கூட்டிச் சென்றுள்ளது.  உலக கோப்பை 2021ல் இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.  அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது.

 

ALSO READ பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News