செஸ் ஒலிம்பியாட்: கேக் மூலம் செஸ் போர்டு வடிவமைத்து அசத்திய பேக்கரி

ராமநாதபுரம் பிரபல பேக்கரியில் செஸ் ஒலிம்பியாடை கௌரவிக்கும் வகையில் செஸ் போர்டு வடிவத்தில் கேக் அமைத்து வைத்துள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 6, 2022, 05:23 PM IST
  • பேக்கரியில் செஸ் போர்டு வடிவில் கேக்
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியை கௌரவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
  • பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்
செஸ் ஒலிம்பியாட்: கேக் மூலம் செஸ் போர்டு வடிவமைத்து அசத்திய பேக்கரி title=

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பிரபல ஐஸ்வர்யா நிறுவனங்களின் பீமாஸ் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரியில் கடந்த பல வருடங்களாக இந்திய அளவில் விளையாட்டுகள், தமிழக அளவில் நிகழ்ச்சிகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்வுகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் படிக்க |  செஸ் விளையாட்டில் ராணிக்கு எப்படி வந்தது இவ்வளவு அதிகாரம் ? - ஓர் சுருக் ‘ஃப்ளாஷ்பேக்’!

உதாரணமாக ஆள் உயர அப்துல் கலாம், ஆள் உயர மடோனா உருவங்களை பல்வேறு கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக தத்ரூபமாக வடிவமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் நிறுவனர் வெங்கட் சுப்பு, பொறுப்பாளர் சதீஷ் ஆகியோரின் ஆலோசனைப்படி செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அதனை கௌரவிக்கும் வகையில் கேக் ஒன்று தயார் செய்யப்பட்டது.

அதில் செஸ் போர்டு, ராஜா, ராணி மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக கேக் வடிவத்தில் அமைத்து தங்களது பேக்கரியில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். இதனை தங்கள் பேக்கரிக்கு வரும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர். இதற்கு முன்பு இதே பேக்கரியில் மகாகவி பாரதியார், டாக்டர்.அப்துல்கலாம், கால்பந்து விளையாட்டு வீரர் மாரடோனா உருவங்களை ஆள் உயரத்திற்கு செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 7 வயது சிறுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News